Paytm பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இந்த Settings உடனே மாத்திடுங்க..!

Advertisement

Paytm App in Tamil

இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவராலும் அதிகம் பயன்படுத்த கூடிய பொருள் என்றால் அது ஸ்மார்ட் போன் தான். ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகரித்து கொண்டே செல்கிறது. அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் எத்தனையோ ஆப்கள் இருக்கின்றன. அதில் Paytm என்ற ஆப்பை இன்று பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதுபோல Paytm ஆப்பில் இருக்கும் Settings உங்களுக்கு தெரியுமா..? வாங்க நண்பர்களே அதை பற்றி தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Paytm App Settings in Tamil:

இன்றைய நிலையில் அனைவருமே Gpay, Paytm, Phone Pay முறைகளை பயன்படுத்தி பணத்தை பரிமாற்றம் செய்து வருகிறார்கள். Gpay, Paytm போன்றவற்றை பயன்படுத்தி யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். அப்படி நாம் பயன்படுத்தும் Paytm ஆப்பில் சில ஆபத்தான Settings -ம் இருக்கிறது. அதை பற்றி இங்கு பார்ப்போம்.

Settings -1 

Profile Settings

முதலில் உங்களுடைய Paytm ஆப் உள்ளே செல்லுங்கள். அடுத்து மேலே இருக்கும் உங்களுடைய Profile கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Profile Settings என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Security Settings

பின் அதில் கீழே நகர்த்தி சென்றால் Security Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Manage App Lock

பின் அதில் Manage App Lock என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

App Lock Password

அதில் App Lock Password என்ற ஆப்சன் இருக்கும். அது OFF செய்யப்பட்டிருந்தால் அதை ON செய்து கொள்ளுங்கள்.

Lock Password

அதை ON செய்ததும் அதில் கீழே 3 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் App Lock Password என்று இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்களுடைய Finger Print கேட்கும். அதை கொடுத்து Proceed என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது  உங்களுடைய Finger Print ஆப் லாக் ஆக மாறிவிடும். இனி நீங்கள் QR Code உள்ளே சென்றாலும், அல்லது Pay பண்ணும் போதும் உங்களுடைய Finger Print கேட்கும். அதுபோல நீங்கள் Paytm பயன்படுத்திவிட்டு, வெளியே சென்று மறுபடியும் உள்ளே வரும் போதும் Finger Print கேட்கும். அதனால் உங்களை தவிர வேறு யாராலும் Paytm -யை பயன்படுத்த முடியாது.  

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?

Settings -2 

Security & Privacy

 

மேல்கூறியது போல Profile Settings உள்ளே செல்லுங்கள். பின் அதில் Security & Privacy என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

Control Screen Recording

பிறகு அதில் Control Screen Recording என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Allow Screen Recording

பின் அதில் Allow Screen Recording என்ற ஆப்சன் இருக்கும். அது ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

காரணம்,  அது ON -ல் இருந்தால் உங்கள் Paytm திரையில் நடக்கும் அனைத்து தகவல்களும் தானாக Record செய்யப்படும். அதனால் நீங்கள் அந்த ஆப்ஷனை OFF செய்து வைப்பதால் தானாக Recording ஆவதை தடுக்க முடியும்.  

பணவர்த்தனை செய்யும் ஆப்பில் தமிழ் மொழியில் மாற்றலாம் எப்படி தெரியுமா.?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement