Play Store App Information in Tamil
ஹலோ நண்பர்களே..! இன்றைய கால கட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் பல ஆப்கள் இருக்கின்றன. அதுபோல நாம் பயன்படுத்தும் அனைத்து ஆப்களையும் டவுன்லோட் செய்வதற்கு Play Store App கட்டாயம் தேவை. இந்த விஷயம் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவருக்குமே தெரியும்.
ஆனால், Play Store App எப்படி பயன்படுகிறது, அதன் வரலாறு என்ன..? அதன் முக்கியத்துவம் என்ன என்று பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் இன்று இந்த பதிவில் மூலம் Google Play Store பற்றி பலரும் அறியாத தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். அதனால் இந்த பதிவு படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்..!
உங்க போன் Play Store App -ல இந்த Settings எல்லாம் உடனே மாத்திடுங்க..! |
Play Store App in Tamil:
Google Play Store என்பது Google’s Mountain View என்ற நிறுவனத்தின் அதிகாரபூர்வ ஆப் ஆகும். இது இலக்கமுறை தகவல்களை வழங்கும் ஒரு சேவை என்று சொல்லப்படுகிறது. இது கூகுளால் இயக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் விநியோகச் சேவை என்று கூறப்படுகிறது.
இதை Google நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு ஆண்ட்ராய்டு மார்க்கெட் என்றும் சொல்லலாம். இந்த Google Play Store ஆப் அக்டோபர் 2008 இல் Android Market என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இந்த Google Play Store ஆப்பை பயன்படுத்தி நாம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தும் ஆப்களை டவுன்லோட் செய்து கொள்ள முடியும்.
அதாவது, Google Play Store ஆப்பை ஆண்டிராய்டு பயன்பாடுகள், இசைக்கோப்பு செயலிகள், புத்தக செயலிகள், திரைப்பட செயலிகள் மற்றும் விளையாட்டு செயலிகள் போன்றவற்றை கொண்ட ஓர் இணையக் கடை என்று சொல்லலாம்.
இதிலிருந்து தான் போனில் நமக்கு தேவையான செயலிகளை பதிவிறக்கம் (Downlode) செய்து கொள்கிறோம்.
அதுபோல இந்த Play Store App உருவாக்கப்பட்ட நாட்களிலிருந்து இன்று வரை நல்ல வளர்ச்சியை கடந்து செல்கிறது.
இந்த ஆப் 2011 ஆம் ஆண்டு வரை ஆண்ட்ராய்டு சாதனங்களின் பயன்பாடுகள் மற்றும் கேம் செயலிகளை கொடுக்கும் ஆப்பாக மட்டுமே இருந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து Google இசை i Tunes மற்றும் Spotify போன்ற பிற சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் பின் Google’s Mountain View என்ற நிறுவனம் இதற்கு Play Store என்ற பெயரை வழங்கியது. அதிலிருந்து ஜூலை 2013 இல், Google Play Store ஆப் ஒரு மில்லியன் பயன்பாடுகளையும், 50.000 மில்லியன் பதிவிறக்கங்களையும் தாண்டி நல்ல வெற்றியை கண்டது. அதை தொடர்ந்து Play Store ஆப்பில் பல செயலிகள் உருவாக்கப்பட்டன.
Play Store App பற்றி தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், நாம் ஒரு கடைக்கு சென்று எப்படி பொருள் வாங்குகின்றோமோ, அதுபோல தான் Play Store ஆப் உள்ளே சென்று நமக்கு தேவையான பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்து கொள்கின்றோம். அதாவது Play Store ஆப்பும் ஒரு மார்க்கெட் போலத்தான் செயல்பட்டு வருகிறது.
எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tech News Tamil |