Truecaller-ல இவ்வளவு Tricks இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம போச்சே..!

Advertisement

Truecaller Safety Settings in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இன்றைய நிலையில் அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள். ஸ்மார்ட் போனில் பல வகையான App-கள் பயன்படுத்தும் வசதிகள் இருக்கிறது. அதில் Truecaller என்ற ஒரு ஆப் இருக்கும். Truecaller எதற்கு பயன்படுகிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் Truecaller -ல் இருக்கும் சில Tricks பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..? இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா..?

Truecaller Tricks in Tamil:  

Tips -1 

முதலில் உங்கள் போனில் Truecaller உள்ளே செல்லுங்கள். அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பின்பு அதில் Appearance என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அதில் Themes என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் அதில் சில Color ஆப்சன் இருக்கும்.

அதில் உங்களுக்கு பிடித்த கலரில் Truecaller -யை மாற்றி கொள்ள முடியும்.

Tips -2 

Call Alert Notification

True caller Settings -ல் General என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதை நகர்த்தி கீழே சென்றால், Call Alert Notification என்ற ஆப்சன் இருக்கும். அதை On செய்ய வேண்டும்.

அதேபோல, அதன் கீழ் Missed Call Notification என்ற ஆப்சன் இருக்கும் அதையும் கிளிக் செய்ய வேண்டும்.

இதன்  மூலம் யாராவது உங்களுக்கு Call செய்கிறார்கள் என்றால், அவர்கள் உங்களை தொடர்பு கொள்வதற்கு முன் உங்களுக்கு ஒரு Notification வரும்.  அதாவது, ஒருவர் உங்களுக்கு Call செய்வதை இந்த Notification மூலம் முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.  

Tips -3 

Messaging Apps

Truecaller Settings -ல் General என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Messaging Apps என்ற ஆப்சன் இருக்கும் அதை On செய்ய வேண்டும்.

இந்த  Messaging Apps என்ற ஆப்சனை On செய்வதால், உங்கள் Whatsapp-ல் தெரியாத ஒரு நபர் Unknown நம்பரில் இருந்து உங்களுக்கு Message செய்கிறார்கள் என்றால், அவர்கள் பற்றிய தகவல்களை இதன் மூலம் உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.  

Whatsapp மட்டுமில்லாமல் Instagram, Facebook போன்றவற்றிலும் யாரவது உங்களுக்கு Unknown நம்பரில் இருந்து Message செய்தால் அவர்கள் பற்றிய தகவலை இதன் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

எப்பொழுதும் உங்கள் Mobile டேட்டாவை On -யில் வைத்திருக்கிறீர்களா..? அப்போ இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொளள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தினமும் ஒரு தொழில்நுட்ப செய்திகள் 
Advertisement