Youtube Settings -ல இவ்வளவு விஷயம் இருக்கா..?

Advertisement

Youtube App Settings in Tamil

அன்பு நெஞ்சம் கொண்ட நேயர்களுக்கு வணக்கம்..! இன்று இந்த பதிவின் மூலம் Youtube -ல் இருக்கும் சில Settings பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய நிலையில் ஸ்மார்ட் போனில் அதிகளவு பயன்படுத்தப்படும் Whatsapp, Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் Youtube -ம் ஓன்று. இதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. அதுபோல நாம் பயன்படுத்தும் விதத்தை வைத்து தான் நம் போனில் இருக்கும் செயலிகள் பாதுகாப்பானதா..? இல்லையா..? என்பதை உறுதி செய்யலாம். அந்த வகையில் Youtube -ல் மாற்ற வேண்டிய Settings என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..!

English-யில் உள்ள YouTube வீடியோவை தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பது எப்படி தெரியுமா?

Youtube Settings in Tamil: 

Settings -1 

முதலில் உங்களுடைய Youtube உள்ளே செல்லுங்கள். பின் அதில் மேலே 3 புள்ளிகள் போன்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்யுங்கள்.

Auto Play Next Video

அதில் Settings என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் Auto Play என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

Auto Play Next Video

பிறகு அதில் Auto Play Next Video என்ற ஆப்சன் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்யுங்கள்.

இப்படி செய்வதால்,  நீங்கள் ஏதும் ஒரு வீடியோ பார்த்து கொண்டிருக்கும் போது மறந்து தூங்கிவிட்டாலோ அல்லது வேற வேலை ஏதாவது செய்து கொண்டிருந்தாலோ, நீங்கள் பார்த்த வீடியோ முடிந்ததும் அது தானாக நின்றுவிடும்.  

Settings -2 

General

பின் அதேபோல் Settings என்ற ஆப்ஷனில் General என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யுங்கள்.

Playback In Feeds

பிறகு அதில்  Playback In Feeds  என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அந்த ஆப்சன் ON செய்யப்பட்டிருந்தால் அதை OFF செய்து கொள்ளுங்கள்.

 நீங்கள் Youtube -ஐ ஓபன் செய்யும் போது வீடியோ எல்லாம் தானாகவே Play ஆகும். அதை நிறுத்த வேண்டும் என்றால் Playback In Feeds என்ற ஆப்ஷனை OFF செய்ய வேண்டும். அதேபோல இதன் மூலம் உங்கள் போன் டேட்டாவை சேமிக்க முடியும்.  
முகத்தை காட்டாமல் Youtube சேனல் மூலம் மாதம் ₹ 50000 to 1 லட்சம் சம்பாதிக்கலாம்!.

Settings -3 

Data Saving

அதேபோல Youtube Settings -ல் Data Saving என்ற ஆப்சன் இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும்.

Data Saving Mode On

பின் அதில்  Data Saving Mode On  என்ற ஆப்ஷனை ON செய்ய வேண்டும். பிறகு அதன் கீழ் 5 ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் முதல் 2 ஆப்ஷனை மட்டும் ON செய்யுங்கள். அதுபோல மற்ற 3 ஆப்சனையும் OFF செய்ய வேண்டும்.

 இதுபோல செய்வதால் உங்கள் மொபைல் போனின் Data -வை சேமித்து வைக்க முடியும். அதேப்போல உங்களுடைய போன் Battery -யும் பாதுகாப்பாக இருக்கும்.  

Settings -4 

Notification

உங்களுடைய Youtube Settings உள்ளே சென்று அதில் Notification என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

Subscriptions

அதில் Subscriptions என்ற ஆப்ஷனை மட்டும் ON செய்ய வேண்டும். அதுபோல மற்ற ஆப்ஷனை எல்லாம் OFF செய்யுங்கள்.

 இப்படி செய்வதால் உங்களுக்கு வரும் Youtube சம்மந்தமான Notification ஏதும் உங்களுக்கு இனி வராது.  

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇

WhatsApp இல்லாத 3 Super Features Telegram-யில் இருக்கு அதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tech News Tamil
Advertisement