வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Dolokind Plus மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க..!

Updated On: December 11, 2023 5:56 PM
Follow Us:
Dolokind Plus Tablet Uses in Tamil
---Advertisement---
Advertisement

Dolokind Plus Tablet Uses in Tamil

இன்றைய சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஏதாவது ஒரு உடல் நல குறைபாடு ஏற்பட்டு கொண்டே தான் இருக்கின்றது. அதிலிருந்து உங்களை பாதுகாத்து கொள்வதற்காக நாம் மருந்துகளேயே அதிக அளவு பயன்படுத்துவோம். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இன்றைய சூழலில் உலகமே மருந்தினால் தான் இயங்கி கொண்டிருக்கின்றது என்றே கூறலாம். இப்படிப்பட்ட சூழலில் நீங்கள் உங்கள் உடல் நலத்தை சரி செய்வதற்காக பயன்படுத்தும் மருந்துகளை பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு மருந்து பற்றிய முழு விவரங்களையும் கூறிக்கொண்டு வருகின்றோம் அந்த வரிசையில் இன்றைய பதிவில் Dolokind Plus மாத்திரை எந்தெந்த பிரச்சனைக்காக பயன்படுத்தபடுகிறது. மேலும் இந்த மாத்திரையை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன மற்றும் எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..

குறிப்பு: மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையும் வாங்கி தானாக பயன்படுத்த கூடாது..!

Redotil மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

Dolokind Plus Tablet Uses in Tamil:

Dolokind Plus Tablet Side Effects in Tamil

இந்த Dolokind Plus மாத்திரை ஒரு ஸ்டிராய்டு எதிர்ப்பு மருந்தாகும். மேலும் இது அழற்சி மருந்து (NSAIDs), முதுமை மூட்டழற்சி, கீல்வாத மூட்டுவலி போன்ற வலி மிக்க முடக்குவாத நிலைகள் உள்ள மக்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் இது வலியை மற்றும் அழற்சியை குறைக்கிறது. Dolokind Plus மாத்திரையானது வீக்கத்தை ஏற்படுத்தும் ப்ரோஸ்டாக்ளாடின்கள் இரசாயனத்தை உருவாக்கக்கூடிய சுழற்சி-ஆக்ஸினேஸ் (COX) எனப்படும் நொதிகளின் விளைவை தடுப்பதன் மூலம் வேலை புரிகிறது.

இந்த மருந்து மாத்திரை வடிவத்தில் கிடைக்கிறது மற்றும் வாய் வழியாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த மருந்தினை மருத்துவர் அளித்த அளவை தவிர அதிகமாகவோ அல்லது குறைவாகவோ எடுத்து கொண்டால் இது பல பக்க விளைவுகளை அளிக்கும் வாய்ப்புள்ளது.

ஓமி டி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் இதை தெரிஞ்சிகோங்க

Dolokind Plus Tablet Side Effects in Tamil:

  • வயிற்றுப் போக்கு
  • வயிற்று வலி
  • குமட்டல்
  • மலச்சிக்கல்
  • வாந்தி
  • தோல் தடிப்பு
  • மூச்சு திணறல்

Dolokind Plus மாத்திரையை பயன்படுத்துவதால் மேலே குறிப்பிட்டுள்ள பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

முன்னெச்சரிக்கை:

இந்த மருந்தினை பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றி கூறி அவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

மேலும் இந்த மருந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது. அதே போல் கர்ப்ப காலத்தில் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த மருந்தினை பயன்படுத்தக்கூடாது.

இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.

Doxiflo 650 மி.கி மாத்திரையை பயன்படுத்துவதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> மருந்து

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now