Nodosis Tablet in Tamil
பொதுவாக நமது உடல் நலத்தில் ஏதாவது ஒரு குறைபாடு என்றால் மருத்துவரை அணுகி மருந்துகளை வாங்கி உட்க்கொள்வது நல்லது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவருமே மெடிக்கல் கடைக்கு சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்வதை பழக்கமாக வைத்திருக்கின்றோம். அப்படி மருத்துவரை அணுகாமல் நாமே மருந்துவாங்கி உட்கொள்வது தவறு. ஆனால் மிகவும் தவிர்க்கமுடியாத சூழலில் மட்டும் இப்படி மருத்துவரை அணுகாமல் மருந்துகளை வாங்கி உட்கொள்கிறீர்கள் என்றால், அப்படி நாம் உட்கொள்ளும் மருந்து எந்தெந்த நோய்களுக்கு தீர்வாக அமையும் என்பதை பற்றிய முழுவிவரங்களையும் தெரிந்து கொண்டு பிறகு உட்கொள்ளுங்கள். அந்தவகையில் இன்றைய பதிவில் நொதோசிஸ் மாத்திரை பற்றிய தகவலை பார்க்க இருக்கின்றோம் அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
இதையும் படியுங்கள்=> டிஸ்பாஸ் மாத்திரை பற்றிய தகவல்
Nodosis Tablet Uses in Tamil:
இந்த நொதோசிஸ் மாத்திரையானது நம் உடலில் ஏற்படும் அஜீரணக்கோளாறு, நெஞ்செரிச்சல், வாயு பிரச்சனை உள்ளிட்டவைகளை குணப்படுத்தும். சிலருக்கு சாப்பிட்டவுடன் வயிற்றில் இருந்து ஏப்பம் ஏப்பமாக வரும்.
மேலும் வயிறு கல் போன்று இருப்பதாக உணர்வார்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இது ஒரு அரிய மருந்தாக உள்ளது. இது நமது வயிற்றில் உருவாக கூடிய ஆசிட்களை நடுநிலையாக்க இதனை உட்கொண்டவுடன் கார்பன்டை ஆக்சைடு வாயுவை உற்பத்தி செய்து ஆசிட் பிரச்சனைகளை போக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்=> மெட்லர் பிளஸ் மாத்திரை பற்றி உங்களுக்கு தெரியுமா
இது நம் உடலில் உள்ள ரத்தம் மற்றும் சிறுநீரிலுள்ள pH அளவைக் கூடுதலாக்கி நெஞ்செரிச்சல், அஜீரணக் கோளாறு பிரச்சனைகளை தீர்க்கிறது. மேலும் நம் வயிற்றில் உள்ள தேவையில்லாத நச்சு பொருட்களை வெளியேற்றுகிறது.
முக்கிய எச்சரிக்கை:
இந்த மாத்திரையினை உணவுக்கு முன்னரோ அல்லது உணவுக்கு பின்னரோ டாக்டர்கள் அறிவுறுத்தலின் படி சாப்பிட்டுக்கொள்ளலாம். டாக்டரின் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரையினை நாம் உட்கொள்ள கூடாது.
மேலும் நீங்கள் வேறு ஏதேனும் நோய்களுக்கு மருந்துகள் உட்கொள்கிறீர்கள் என்றால் அதனை அவசியம் மருத்துவரிடம் தெரிவிக்கவேண்டும். அப்போது தான் அவர் அதனை கருத்தில்கொண்டு இந்த மாத்திரையினை உங்களுக்கு பரிந்துரைப்பார்.
இதையும் படியுங்கள்=> சிப்ஸன் ஃபோர்டே மாத்திரை பற்றிய தகவல்
மேலும் வயிறு, கிட்னி சம்பந்தமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டால் டாக்டர்களின் அறிவுரைப் படியே இம்மருந்தை உட்கொள்வது அவசியம். அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள், தாய்ப்பாலுாட்டும் பெண்கள் ஆகியோர் தகுந்த டாக்டர்களிடம் கலந்தோசித்த பின்னரே இந்த மாத்திரைகளை உட்கொள்வது நல்லது.
Nodosis Tablet Side Effects in Tamil:
- அடி அல்லது கீழ்ப்புற கால்களின் வீக்கம்
- வழக்கத்திற்கு மாறான சோர்வு
- குமட்டல் அல்லது வாந்தி
- விரும்பத்தகாத சுவை
- பசியின்மை
- தசை வலி
- வேகமான சுவாசித்தல்
- மனநிலை அல்லது உளவியல் மாற்றங்கள்
- நரம்புத் தளர்ச்சி அல்லது ஓய்வின்மை
- தலைவலி
இங்கே கொடுக்கப்பட்ட தகவல்கள் மருந்தின் உப்பு உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. மருந்தின் பயன்கள் மற்றும் விளைவுகள் ஒவ்வொரு நபருக்கும் மாறுபடும்.
இதையும் படியுங்கள்=> சுப்ரடின் மாத்திரை பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா
இது போன்ற மருந்து சார்ந்த பதிவுகளை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | மருந்து |