வெறும் 3000 ரூபாய் முதலீடு போட்டால் போதும் மாதம் 50,000 ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய அருமையான தொழில்..!

Advertisement

Noodles Business Plan in Tamil

இக்காலத்தில் சுயதொழில் செய்தால் மட்டுமே நமக்கு இருக்கும் பணத்தேவையை பூர்த்தி செய்ய முடியும். அதனால் பலபேர் சுயதொழில் செய்ய தொடங்கி விட்டார்கள். சுயதொழில் தொடங்குவதற்கு முன் யோசித்து முதலீடு குறைவாக போட்டு அதிக லாபம் ஈட்டக்கூடிய தொழிலை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் சுயதொழில் தொடங்க நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ள வகையில் நம் பொதுநலம்.காம் பதிவில் தினமும் பல சுயதொழில்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 3000 ரூபாய் முதலீட்டில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் தரக்கூடிய தொழிலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.

அதாவது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய நூடுல்ஸ் பிசினெஸ் எப்படி செய்வது..? இதற்கு என்னென்ன பொருட்கள் தேவை..? முதலீடு எவ்வளவு வருமானம் எவ்வளவு..? போன்ற விவரங்களை பதிவிட்டுள்ளோம். சுயதொழில் தொடங்க நினைக்கும் அனைவரும் இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Make Noodles Business Plan in Tamil:

இத்தொழிலுக்கு தேவையான இடம்:

இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டு பகுதிகளிலே தொடங்கலாம். பிறகு தொழில் நன்றாக வளர்ச்சி அடைந்த பிறகு தனியாக ஒரு இடம் அமைத்து கொள்ளலாம்.

மூலப்பொருட்கள்:

  • கோதுமை 
  • மைதா
  • நூடுல்ஸ் தயாரிப்பு மெஷின்
  • நூடுல்ஸ் ட்ரையர் மெஷின்
  • பேக்கிங் மெஷின்
  • எடை கருவி
  • பேக்கிங் கவர்

இதையும் படியுங்கள்⇒ முதலீடே இல்லாமல் தொழில் செய்யலாமா ஆச்சரியமா இருக்கே..  சும்மா செஞ்சு பாருங்க அதுல அவ்ளோ லாபம் வரும்.. 

முதலீடு: 

இத்தொழிலுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் அதன் மாடலுக்கு ஏற்ப மாறுபடும். எனவே மெஷின்களை தவிர்த்து மற்ற முதலீடு என்று பார்த்தல் 3000 ரூபாய் தேவைப்படுகிறது.

நூடுல்ஸ் தயாரிக்கும் முறை:

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு மற்றும் 7 லிட்டர் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.

பிறகு இவற்றை உதிரியாக பிசைந்து கொள்ளுங்கள். அதாவது புட்டு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்போது இந்த மாவை நூடுல்ஸ் தயாரிப்பு இயந்திரத்தில் கொட்டினால் ரோல் மாதிரியான வடிவத்தில் நமக்கு கொடுக்கும்.

இதை மீண்டும் அதே மெஷினில் சேர்த்து மற்றொரு செட்டிங் முறையில் வைத்தால் நூடுல்ஸ் போன்று கட் செய்து விடும். அதன் பின் இந்த நூடுல்ஸை எடுத்து பாய்லரில் வைத்து 40 நிமிடங்கள் முதல் 50 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும்.

பிறகு இதை பாய்லரில் இருந்து ட்ரேயில் எடுத்து வெயிலில் 1 நாள் முழுவதும் நன்றாக காயவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்றாக உலர்ந்ததும் தேவையான எடையில் பேக்கிங் கவரில் பேக் செய்து கொள்ளுங்கள்.

இத்தொழில் தொடங்க தேவையான சான்றிதழ்கள்:

உணவு சார்ந்த எந்த தொழில் செய்தலும் FSSAI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் நீங்கள் இதை ஆன்லைனில் விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் GST Registration சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்⇒ இந்த தொழிலை இப்போதே ஆரம்பித்தால் எதிர்காலத்தில் நீங்கள் தான் Boss.. என்றும் கைகொடுக்கும் நிரந்தரமான தொழில் 

விற்பனை செய்யும் இடங்கள்:

  • மளிகை கடை
  • சூப்பர் மார்க்கெட் 
  • டிபார்ட்மெண்ட் ஸ்டோர்
  • ஆன்லைன் ஸ்டோர்

வருமானம்:

உற்பத்தி செலவுடன் 20% லாபத்திற்கு ஏற்றவாறு தனியார் நிறுவனங்களுக்கு ஆர்டர் எடுத்து விற்பனை செய்தால் மாதம் ரூ. 50 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil

 

Advertisement