பொன்னாங்கண்ணி கீரையை எளிய முறையில் இப்படியும் மாடித்தோட்டத்தில் பயிரிடலாம் ..!

Advertisement

பொன்னாங்கண்ணி கீரை மாடித்தோட்டம் 

வணக்கம் நண்பர்களே..! இன்று நம்முடைய விவசாய பதிவில் மாடி தோட்டத்தில் பொன்னாங்கண்ணி சாகுபடி சுலபமாக செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். கீரை வகைகள் எப்போதும் உடலுக்கு நன்மையை மட்டும் தரக்கூடிய ஓரு உணவு பொருளாகவும். இந்த பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு சத்து மற்றும்  மினரல் சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் கணங்களுக்கு மிகவும் நல்லது. 48 நாட்கள் தொடர்ந்து இந்த கீரை சாப்பிட்டால் கண் சம்மந்தமான பிரச்சனை வராது. மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும் சத்துக்கள் பொன்னாங்கண்ணி கீரைக்கு இருக்கிறது. அத்தகைய பொன்னாங்கண்ணி கீரையை மாடி தோட்டத்தில் சாகுபடி செய்து எப்படி என்று இந்த பதிவின் மூலம் நீங்கள் பயன்பெறுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ மாடித்தோட்டத்தில் முட்டைகோஸை சுலபமாக பயிரிடும்       முறை

 பொன்னாங்கண்ணிக் கீரை பயிரிடும் முறை:

பொன்னாங்கண்ணி கீரையை பயிரிடுவதற்கு நீங்கள் விதை, உரம் என்று எதுவும் வாங்க வேண்டியது இல்லை. பொன்னாங்கண்ணி கீரை ஒரு கட்டு மட்டும் போதும். இப்போது நீங்கள் அந்த பொன்னங்கண்ணி கீரையின் இலைகளை அகற்றி தண்டினை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு பெரிய தொட்டியில் மண்ணை  போட்டு நிரப்பி விடுங்கள். மண் மிகவும் அழுத்தமாக இல்லாமல் லேசாக பரப்பி விடுங்கள். அதன் பிறகு கீரை தண்டுகளை இடைவெளி விட்டு நட்டு வைத்து விடுங்கள்.

அடுத்ததாக கீரையை பயிர் செய்த பிறகு மீண்டும் மண்ணை செடியின் மேலே லேசாக தூவி விட்டு தண்ணீர் ஊற்றுங்கள்.

பொன்னாங்கண்ணி கீரை பராமரிப்பு:

இந்த பொன்னாங்கண்ணி கீரைக்கு என்று நீங்கள் தனியாக உரம் வாங்க வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் பழக்கழிவுகள், காய்கறி கழிவுகள் மட்டும் போதும். இந்த செடியை பராமரிக்கவும் உங்களுக்கு கடினமாக இருக்காது.

அதுபோல தினமும் நீங்கள் இந்த செடிக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு என்று நேரத்தை ஒதுக்க வேண்டாம். நீங்கள் சமையலில் கீழே ஊற்றும் பருப்பு தண்ணீர், அரிசி தண்ணீர் இந்த மாதிரியான தண்ணீரினை ஊறினால் போதும். இந்த செடி நல்ல செழிப்பாக வளர்ந்து விடும்.

அதிக வெயில் இருக்க வேண்டும் என்ற அவசியம் பொன்னாங்கண்ணி கீரை செடிக்கு கிடையாது. நிழலில் கூட இந்த செடி வளரும்.  நீங்கள் பயிர் செய்து 3 வாரத்தில் இந்த கீரை வளர்ந்து விடும்.

உங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் போட ஆசையா?

பொன்னாங்கண்ணி கீரை வளர்ப்பு:

நீங்கள் ஒரு முறை நட்டு வைக்கும் இந்த பொன்னாங்கண்ணி கீரையில் 4 அல்லது 5 முறை கீரைகளை பரித்து கொள்ளலாம். அதற்கு பிறகு மீண்டும் நீங்கள் மண்ணை கிளறி விட்டு சாகுபடி செய்யலாம்.

இந்த கீரை மழைக் காலத்திலும் நன்றாக விளைச்சல் தரக்கூடிய தாகும். இவ்வளவு நன்மைகள் நிறைந்து உள்ள கீரை மாடி தோட்டத்தில் நிறைய லாபத்தை பெற முடியும்.

இது போன்று தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Pasumai Vivasayam in Tamil

 

 

 

Advertisement