ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..! Rose Plant Care in Tamil..!

Rose Plant Care in Tamil

ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க டிப்ஸ்..! Rose Plant Care in Tamil..!

Rose Plant Care in Tamil:- பொதுவாக வீட்டில் செடி வளர்ப்பதில் அனைவருக்கும் அதிக விருப்பம் இருக்கும். அந்த வகையில் அனைவரும் ரோஸ் செடி வளர்க்க அதிக ஆர்வம் கொள்வார்கள். இருப்பினும் ரோஸ் செடிகளை வளர்ப்பதில் ஒழுங்கான பராமரிப்பு முறையை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இல்லை எனில் செடிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும்.

ஒரே ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க என்ன செய்வது?

சரி இந்த பதிவில் ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க (Rose Plant Care in Tamil) ஒரு சிறந்த டிப்ஸினை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர டானிக் செய்முறை (Rose Plant Care in Tamil):

பொதுவாக நம் சமையலறையில் உள்ள கழிவு பொருட்களை நாம் கழிவு பொருட்கள்தானே என்று குப்பையில் கொட்டி விடுவோம். இருப்பினும் இந்த கழிவு பொருட்களை பயன்படுத்தி கூட ரோஜா செடியில் நிறைய ரோஜா பூக்கள் பூக்க வைக்கலாம். சரி வாங்க இந்த கழிவு பொருட்களை பயன்படுத்தி ஒரு சிறந்த டானிக் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

ரோஸ் செடி நன்கு வளர சில டிப்ஸ்..! Rose Uram in Tamil..!

Rose Plant Care in Tamil – தேவையான பொருட்கள்:

  1. அரிசி கழுவிய நீர் – ஒரு கப்
  2. முட்டை ஓடு – 4
  3. வெங்காயம் தோல்
  4. வாழைப்பழ தோல் – 4 (சிறிதாக நறுக்கியது)
  5. வேப்பிலை – சிறிதளவு
  6. தண்ணீர் – தேவையான அளவு
  7. டீத்தூள் கழிவுகள் – சிறிதளவு
ரோஸ் செடிக்கு மண் கலவை தயார் செய்யணுமா? அப்போ இதை Try பண்ணுங்க..!

ரோஜா பூக்கள் அதிகம் பூக்க டானிக் செய்முறை (Rose Plant Care in Tamil):

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர – Rose chedi valarpu murai tamil step: 1

ஒரு பெரிய பாத்திரத்தில் அவிக்காத முட்டையின் ஓடு – 4, வெங்காய தோல், வாழைப்பழ தோல் மற்றும் 1 1/2 கப் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக 5-8 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர – Rose chedi valarpu murai tamil step: 2

பின் அடுப்பில் இருந்து இறக்கி அவற்றுடன் டீத்தூள் கழிவுகள், அரிசி கழுவிய நீர் மற்றும் வேப்பிலை சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள்.

பின் இரண்டு மணி நேரம் நன்கு ஆறவைக்கவும். பின் இந்த நீரை ரோஸ் செடிகளுக்கு ஊற்றவும். இவ்வாறு ரோஸ் செடிகளுக்கு வாரத்தில் ஒருமுறை செய்து ஊற்றினால், ரோஸ் செடி நன்கு வளர்ந்து நிறைய பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். இந்த நீரை காய்கறி செடிகளுக்கு கூட வாரத்தில் ஒரு முறை ஊற்றலாம். செடி நன்கு ஆரோக்கியமாக வளரும்.

ரோஜா செடிகள் தொடர்ச்சியாக பூக்கள் பூக்க 10 பயனுள்ள டிப்ஸ்..!

 

ரோஜா செடி பூ அடர்த்தியாக வளர – Rose chedi valarpu murai tamil step: 3

இந்த நீரில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் தோல், வாழைப்பழ தோல் மற்றும் முட்டையின் ஓடு மூன்றிலும் செடிகளை நன்கு ஆரோக்கியமாக வளர வைக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்பதால், இந்த மூன்று பொருட்களையும் பயன்படுத்தி தயார் செய்த இந்த நீரை செடிக்கு பயன்படுத்துங்கள்.

நிச்சயம் ரோஸ் செடி நன்கு வளர்ந்து, ரோஸ் செடியில் நிறைய பூக்கள் பூக்க (Rose Plant Care in Tamil) ஆரம்பிக்கும்.

 

இதுபோன்ற விவசாயம் பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>pasumai vivasayam in tamil