மயில் மாணிக்கம் செடி வீட்டில் வளர்க்கும் முறை…!

Advertisement

Mayil Manikkam Plant Tips in Tamil

நண்பர்களே வீட்டில் அழகு படுத்த நிறைய வகையான செடிகளை வளர்ப்போம். அதிலும் சிலர் அழகுக்காக நிறைய விதமான செடிகளை வாங்கி கஷ்ட பட்டு வளர்ப்பார்கள். காரணம் அதனை வீட்டில் வளர்த்தால் அதிஷ்டம், என்பதற்காகவும் வளர்ப்பார்கள். அப்படி வளர்க்கும் செடிகளில் இந்த மயில் மாணிக்க செடியும்  உள்ளது.

சிலர் வீட்டில் இந்த மயில் மாணிக்கம் வளர்க்க முடியாமல் இருக்கும் ஒவ்வொரு முறையில் வளர்க்கும் போது அது வளராமல் செத்துவிடும். அதனை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!

மயில் மாணிக்கம் செடி வளர்ப்பு:

இந்த செடியானது வளர்ப்பது விதையை வைத்து தான், இதற்கு ஏன் மயில் மாணிக்கம் என்று பெயர் வந்து என்றால்  இந்த செடியில் பூக்களின் நிறம் அடர் சிவப்பு நிறமாக இருப்பதால் தான். அதன் பின் இதனுடைய இலையானது மயில் போல் விரியாவாக இருக்கும் என்பதால் தான் இதற்கு மயில் மாணிக்கம் என்று பெயர் பெற்றது .

டிப்ஸ்: 1

முதலில் இது ஒரு கொடி வகை ஆகும். அதேபோல் இந்த கொடியின் விதையை 2 அடிக்கு குழி பறித்து அதில் வைத்து சிறிது தண்ணீர் விட்டு மூடிவிடவும். பின்பு அதன் மீது தண்ணீர் விடவும். இதேபோல் தினமும் காலையில் மாலையில் ஓரளவு தண்ணீர் விடவும்.

டிப்ஸ்: 2

cypress vine indoors tips

இந்த விதையை வைத்து சரியாக 15 நாட்கலுக்குள் கொடியானது வெளியில் வந்துவிடும். இதனை நீங்கள் பூத்தொட்டியிலும் வைக்கலாம். இந்த கொடியானது ஆரம்ப காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளரும்.

டிப்ஸ்: 3

cypress vine indoors tips

ஓரளவு செடி வளர அதிகபட்சமாக 55 நாட்களுக்கு மேல் ஆகும். இதனை வளர்க்க சில வீட்டில் தனியாக பந்தல் வைத்து வளர்ப்பார்கள். இதனுடைய பூக்கள் கண்களை பற்றிக்கும் நிறம் கொண்டவை.

இதையும்  படியுங்கள் ⇒ உங்கள் வீட்டு செடிகளை வளர விடாமல் தடுக்கும் பூச்சிகளை விரட்ட இந்த ஒரு கரைசல் போதும்..!

டிப்ஸ்: 4

cypress vine indoors tips

இந்த மயில் மணிக்க கொடிகளுக்கு தண்ணீர் எந்தளவிற்கு ஊற்றீர்களோ அந்த அளவிற்கு வெயிலும் சரியான வெப்பத்தில் தான் இருக்க வேண்டும். இதனை அதிகமான வெப்பத்திலும் வைக்க முடியும்.

இதற்கு காலை வெயில் மிகவும் அவசியமானது சாதாரணமாக ஒரு செடிக்கு 8 மணி நேரம் வெயில் தேவைப்படும். ஆகவே அதற்கு தகுந்தது போல் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 5

cypress vine indoors tips

இதற்கு தனியாக எந்த உரமும் தேவையில்லை அதுவே வளரும், முக்கியமாக இந்த செடி வைத்து 65 நாட்களில் மொட்டுக்கள் வைத்துவிடும். ஆனால் பூக்கள் பூக்குவதற்கு நேரம் எடுக்கும்.

கொடி ஓரளவு வளர துவங்கியதும் நூல்களைகொண்டு வீட்டில் மேல் புறம் கட்டிவிட்டால் கொடி அதுவே மேல் ஏறிவிடும் அல்லது நீங்கள் அதில் படரவைக்கலாம்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 எந்த பூச்செடியாக இருந்தாலும் சரி அதில் பூக்கள் அதிகமாக பூக்க இதை மட்டும் செய்யுங்க..!

இதுபோன்ற இயற்கை விவசாயம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> இயற்கை விவசாயம் 
Advertisement