நாளை வரும் அபூர்வ அமாவாசை..! இதை மட்டும் செய்தால் நன்மை நமக்கே..!

Jyeshtha Amavasya 2023

Jyeshtha Amavasya 2023

வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இன்றைய நிலையிலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். பொதுவாக இந்து மதத்தில் மாதம் மாதம் ஏதாவது ஒரு விசேஷம் வந்து கொண்டு தான் இருக்கும். அதாவது அமாவாசை விரதம், கார்த்திகை விரதம், சஷ்டி விரதம் போன்றவற்றை தான் கூறுகிறேன். அப்படி நாம் அனைவரும் கடைபிடிக்கும் விரதங்களில் அமாவாசை விரதமும் ஓன்று. அமாவாசை அன்று சைவ உணவுகளை சமைத்து முன்னோர்களுக்கு படைத்து வழிபடுவார்கள். அதேபோல இந்த மே மாதமும் 19 ஆம் தேதி ஜயேஷ்ட அமாவாசை வருகிறது. அன்று என்ன செய்தால் நல்லது நடக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

பெண்கள் அமாவாசை விரதம் இருக்கலாமா.. இருக்க கூடாதா..

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை..!

அதிர்ஷ்டத்தை தரும் ஜயேஷ்ட அமாவாசை

பொதுவாக இந்து மதத்தில் அமாவாசை விரதத்திற்கு தனி சிறப்பு உண்டு. அதேபோல மே 19 ஆம் தேதி வரும் அமாவாசையில் சனி ஜெயந்தியும் சேர்ந்து வருகிறது. அதனால் இந்த அமாவாசை மிகவும் விசேஷமானதாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் மே 19 ஆம் தேதியே சாவித்திரி விரதம், ஜயேஷ்ட அமாவாசை மற்றும் சனி ஜெயந்தி மூன்றும் சேர்ந்து வருகிறது. அதனால் இந்த நல்ல நாளில் விரதம் இருந்தால் முன்னோர்களின் ஆசிர்வாதமும், சனி பகவான், விஷ்ணு, சங்கரர் ஆகியோரின் ஆசியும் கிடைக்கும்.

மேலும் இந்த நாளில் திருமணமான பெண்கள் சாவித்திரி விரதத்தைக் கடைப்பிடித்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஜயேஷ்ட அமாவாசை அன்று நீராடுவது, தானம் செய்வது, விரதம் இருப்பது, ஆலமரத்தை வழிபடுவது போன்றவற்றை செய்தால் நல்ல பலன்களை தரும்.

7 கல் உப்பு கேட்டது கிடைக்க வைக்கும்.. இதை மட்டும் செய்யுங்கள்

அதுபோல ஜயேஷ்ட அமாவாசை அன்று புண்ணிய நதிகளில் நீராடினால் 7 பிறவிகளின் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும். மேலும் இந்த நாளில்  தர்ப்பணம் செய்வது முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். அதனால் அவர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

ஜயேஷ்ட அமாவாசை எப்போது தொடங்குகிறது..? 

ஜயேஷ்ட அமாவாசை திதி மே 18, 2023 அன்று இரவு 09.42 மணிக்கு தொடங்கி மே 19, 2023 அன்று இரவு 09.22 மணிக்கு முடிவடைகிறது. இருந்தாலும் மே 19 வெள்ளிக்கிழமை அன்று தான் ஜ்யேஷ்ட அமாவாசையாகக் கருதப்படுகிறது.

அதுபோல சாவித்திரி பூஜை முகூர்த்தம் – காலை 05.43 முதல் 08.58 வரை.

சனி பகவான் பூஜை முகூர்த்தம் – மாலை 06.42 முதல் 07.03 வரை.

👉அமாவாசை அன்று செய்ய கூடாதவை

அமாவாசை அன்று செய்ய வேண்டியவை: 

  • ஜயேஷ்ட அமாவாசை அன்று புனித நதி, நீர்த்தேக்கம் அல்லது குளத்தில் நீராடுவதால் பாவங்கள் நீங்கும்.
  • அமாவாசை அன்று நீரில் கருப்பு எள்ளை விட்டால் கஷ்டங்கள் நீங்கும்.
  • 19 ஆம் தேதி தர்ப்பணம் கொடுத்து, ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். இதனால் முன்னோர்களின் ஆன்மா சாந்தியடையும்.
  • ஜயேஷ்ட அமாவாசை அன்று திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் நீண்ட ஆயுளுக்காக யம தேவதையை வைத்து வழிபட வேண்டும்.
  • சனி பகவான் ஜயேஷ்ட அமாவாசை அன்று பிறந்தார். அதனால் சனி ஜெயந்தி அன்று கடுகு எண்ணெய், கறுப்பு எள், கறுப்பு ஆடைகள் மற்றும் நீல நிற மலர்களை வைத்து பூஜை செய்யவும். மேலும் சனி பகவானின் மந்திரத்தை உச்சரிக்கவும்.
  • இதனால் நம்மிடம் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும்.

👉மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் அமாவாசை விரதம் எடுக்கலாமா

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள்