Maha Shivaratri 2024
ஆன்மீக அன்பர்கள் அனைவர்க்கும் வணக்கம். நாம் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மஹா சிவராத்திரி இந்த ஆண்டு எப்போது வருகிறது என்று இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க. பொதுவாக, சிவராத்திரி என்றாலே மிகவும் விசேஷமான நாள். அதிலும் முக்கியமாக, மஹா சிவராத்திரி என்றால் மிகவும் சிறப்பான விழாவாகும். இந்நாளில் பார்வதி தேவியும், தேவர்களும் சிவபெருமானை வழிபட்டு அவர்கள் வேண்டிய வரங்களை பெற்றுக்கொண்டார்கள் என பல புராணங்கள் கூறுகிறது. அதேபோல், நாமும் மஹா சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வெற்றியை அருளுவார்.
மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானின் அருளை பெற்றுக்கொள்ளலாம். சிவபெருமானுக்கு விரதங்களில் மிகவும் சக்திவாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி திதியில் வருவதை மாத சிவராத்திரி என்றும், மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியில் வருவதை மகா சிவராத்திரி என்றும் வழிபட்டு வருவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டு மஹா சிவராத்திரி எப்போது என்பதை பார்க்கலாம் வாங்க.
Maha Shivaratri 2024 Date and Time in Tamil:
2024 ஆம் ஆண்டு மஹா சிவராத்திரி மார்ச் மாதம் 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. தமிழ் தேதியில் மாசி 25 ஆம் தேதி வருகிறது. அன்றைய நாள் பிரதோஷம், ஸ்ரீ மஹா சிவராத்திரி, சுபமுகூர்த்தம் ஆகும். அன்று இரவு 08.20 PM மணிக்கு துவங்கி, மார்ச் 09ம் தேதி மாலை 6:00 PM மணி வரை சதுர்த்தசி திதி உள்ளது. இதனால் மார்ச் 08ம் தேதி இரவு 08.30 மணிக்கு பிறகுசிவராத்திரி பூஜையை துவங்கலாம்.
சூரிய பகவான், கும்ப ராசியில் பயணம் செய்யும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தி நாளில் முதல் நாள் மாலை துவங்கி, அடுத்த நாள் காலை வரை சிவனுக்கு தொடர்ந்து நான்கு கால பூஜைகள் செய்யப்படும்.
மஹா சிவராத்திரி பலன்கள்:
- மஹா சிவராத்திரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவபெருமானின் அருளை பெற முடியும்.
- அன்றைய தினத்தில் சிவபெருமானை வழிபடுவதன் வழிபடுவதன் மூலம் மூன்று பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும்.
- கவலைகள், கஷ்டங்கள், நோய்கள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
- மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிப்படுவதன் மூலம் எல்லாவற்றிலும் இருமடங்கு நற்பலன்களை பெறலாம்.
இது போன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மீக தகவல்கள் |