Selva Selippu Athikarikka Tips in Tamil
பொதுவாக யாருக்கு தான் பணம், பொன்பொருள் போன்ற செல்வங்கள் பிடிக்காது. அதிலும் குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் பணம், பொன்பொருள் இல்லாதவர்களை இந்த சமுதாயம் ஒரு மனிதனாகவே மதிப்பதில்லை. எனவே அனைவருமே இந்த செல்வங்களை தங்களின் வசம் என்றும் வைத்திருக்க வேண்டும் என்று சிந்தனை செய்கிறாரகள். எனவே அதற்காக விடாமுயற்சியுடன் உழைக்கிறார்கள். ஆனாலும் நாம் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் நமக்கு தேவையான நேரத்தில் நம்மிடம் இந்த செல்வங்கள் இல்லை என்றால் நமக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் தான் நம் வீட்டில் என்றும் செல்வங்கள் நிறைந்திருக்க உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
வீடு மற்றும் தொழில் செய்யும் இடத்தில் பணவரவு ஏற்பட இந்த ஒரு இலை மட்டும் போதும்
Veetil Selvam Peruga Pariharam in Tamil:
வீட்டில் என்றும் செல்வம் அதிக அளவில் இருந்து கொண்டே இருப்பதற்கு உதவும் ஒரு பரிகாரத்தை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள்:
- சிறிய மஞ்சள்துணி – 1
- கல் உப்பு – 1 கைப்பிடி அளவு
- விரலி மஞ்சள் – 1
- 1 ரூபாய் நாணயம் – 1
- மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
- குங்குமம் – 1 சிட்டிகை
- மைக்க கவர் (Mica Cover) – 1
எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியானாலும் இதை மட்டும் ஒருமுறை செய்யுங்க உடனடியாக நீங்கிடும்
பரிகாரம் செய்யும் முறை:
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 சிறிய மஞ்சள்துணியை எடுத்து அதன் மீது மைக்க கவரை வைத்து அதன் மீது 1 கைப்பிடி அளவு கல் உப்பு, 1 விரலி மஞ்சள், 1 ரூபாய் நாணயம், 1 சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் 1 சிட்டிகை குங்குமம் ஆகியவற்றை வைத்து ஒரு மூட்டைபோல் கட்டி கொள்ளுங்கள்.
அதற்கு மஞ்சள் குங்கும போட்டு வைத்து கொள்ளுங்கள். பிறகு அதனை உங்கள் வீட்டின் பூஜை அறையில் வைத்து நன்கு பூஜை செய்துவிட்டு உங்கள் வீட்டின் நிலைவாசலில் கட்டி கொள்ளுங்கள்.
பரிகாரம் செய்யும் நாள் மற்றும் நேரம்:
இந்த பரிகாரத்தை ஆடி மாதத்தின் அம்மாவாசை அன்று அதிகாலை பிரமுகுர்த்த நேரத்தில் செய்து கொள்ளுங்கள். இந்த மூட்டையில் உள்ள பொருட்களை அடுத்து வரும் அம்மாவாசை நாளில் மாற்றி கொள்ளுங்கள்.
மேலும் இந்த மூட்டையில் உள்ள உப்பு மற்றும் விரலி மஞ்சளை நீர்நிலைகளில் கரைத்து கொள்ளுங்கள். இந்த மூட்டையில் உள்ள 1 ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.
வீட்டில் வைக்க இடம் இல்லாத அளவிற்கு பணவரவு அதிகரிக்க சீரகம் மட்டும் போதும்
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |