நல்லது நடக்க போவதற்கான சுப சகுனங்கள்

suba sagunangal in tamil

சுப சகுனங்கள்

வணக்கம் நண்பர்களே.! இன்று நம் பதிவில் சுப சகுனங்கள் பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். நமது முன்னோர்கள் அதிகம் சகுனம் பார்ப்பார்கள். உதாரணத்திற்கு ஏதேனும் நல்ல விஷயங்களுக்கு செல்லும் பொழுது பூனை குறுக்கே சென்றால் ஏதோ தவறுகள் நடக்க போகிறது என்று நம் முன்னோர்கள்  சொல்வார்கள்.  அதேபோல் உங்களுக்கு வெற்றிகளை கொடுக்கும் சில சகுனங்களை பற்றி நம் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..

நல்ல சகுனம், கெட்ட சகுனம் பார்ப்பது எப்படி?

 

நல்ல சகுனங்கள்:

நாம் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நிறை குடத்துடன் பெண்களோ, ஆண்களோ அல்லது யாராக இருந்தாலும் நிறை குடத்துடன் வரும் பொழுது நினைத்த காரியங்கள் நடக்கும்.

அதுபோல் வெளியில் செல்லும் பொழுது யானை எதிரில் வந்தால் நினைத்த காரியங்கள் கை கூடும் என்று ஆன்மிகத்தில்  சொல்லப்படுகிறது.

திருமணமான தம்பதிகள் மாலையுடன் எதிரில் வந்தால் நாம் போகும் காரியங்கள் வெற்றி அடையும்.

அதே போல பசுமாடும், அதனுடைய கன்றும் எதிரில் வரும் பொழுது நல்ல காரியங்கள் நடைபெறும் என்று ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது.

முருகனின் வாகனமான மயில் எதிரில் வந்தாலும் நம் நினைத்த காரியங்கள் வெற்றி அடையும்.

வெளியில் செல்லும் பொழுது  பூ வியாபாரி அல்லது வெற்றிலை வியாபாரி எதிரே வரும் பொழுது இந்த பொருட்களின்  நறுமணத்தை உணரும் பொழுது திருமண நிகழ்வுகள் நடக்கும்.

வெளியில் செல்லும் பொழுது பால் மற்றும் உப்பு பொருட்களை எதிரில் பார்த்தாலோ அல்லது பால், உப்பு வியாபாரிகளை பார்த்தாலும் நல்ல நிகழ்வுகள் நடக்கும்.

நாம் வெளியில் செல்லும் பொழுது காக்கை இடம் இருந்து வலம் சென்றால் நல்லது தான் நடக்கும்.

தீர்க்க சுமங்கலி பெண்கள் நெற்றி நிறைந்த குங்குமம் வைத்து கொண்டு, நாம் போகும் நேரத்திற்கு எதிரில் வரும் பொழுது போகும் காரியங்கள் வெற்றி அடையும்  என்று ஆன்மிகத்தில்  சொல்லப்படுகிறது.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>ஆன்மிக தகவல்கள்