வித்தைக்காரனை வென்ற தெனாலியின் கதை..! Tenali Raman Story for Kids in tamil..!

வித்தைக்காரனை வென்று கர்வத்தை அடக்கிய தெனாலி..! Tenali Raman Story For Kids in tamil..!

Tenali Raman Kathai: ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் தெனாலியின் சாதுர்ய திறமையால் செப்படி வித்தைக்காரனை எப்படி வென்றான் என்பதன் கதையை பற்றி தான் இந்த பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்ளப்போகிறோம். தெனாலி கதை என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சரி வாங்க நண்பர்களே இப்போது தெனாலிராமன் செப்படி வித்தைக்காரனை வென்ற கதைகளை பற்றி முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

newதெனாலிராமன் காளியிடம் வரம் பெற்ற கதை..! Tenali Rama Story..!

தெனாலி கிருஷ்ணதேவராயரை காண விஜயநகரம் சென்றான்:

tenali raman kathaiதெனாலி ராமன் ஒரு நாள் விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் புகழை கேள்விப்பட்டதும் அவரை பார்க்க வேண்டும் என்பதற்காக தெனாலி விஜயநகரம் சென்றான். தெனாலி அரசரை காண பல நாட்கள் அங்கேயே தங்கி இருந்தும் அவரை காண முடியவில்லை. அரசரை சந்தித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் அரண்மனைக்கு போவதும், வருவதுமாக இருந்தான் தெனாலி.

வித்தைக்காரனை சந்தித்த தெனாலி:

tenali raman kathaiவித்தைகள் செய்து வேடிக்கை காட்டும் செப்படி வித்தைக்காரனை ஒருநாள் தெனாலிராமன் சந்தித்தான். தெனாலி மனதில் வித்தைக்காரனும் அரசரிடம் வித்தைகளை காட்டி பரிசு பெற இருப்பதை தெனாலி புரிந்துகொண்டான். வித்தைக்காரனுடன் தெனாலியும் வித்தைக்காரன் போன்று சேர்ந்துகொண்டான்.

அரசர் முன் செய்த வித்தை:

அரசர் முன் செப்படி வித்தைக்காரன் வித்தைகளை செய்து அங்குள்ள அனைவரையும் மகிழ்வித்தான். இவன் செய்த வித்தைகளை பார்த்ததும் அரசரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து ஆயிரம் பொற்காசுகள் பரிசளித்தார்.

அரசரிடம் சவால் செய்த தெனாலி:

tenali raman kathaiவித்தைக்காரன் அந்த பரிசை வாங்கும் முன்பே தெனாலிராமன் அரசரிடம் இவனை விட வித்தை செய்வதில் வல்லவன் நான். நான் செய்யும் வித்தைகளை இவனால் செய்யமுடியுமா என்று அரசரை கேட்க சொன்னான் தெனாலி. அதன் பிறகு ஆயிரம் பொற்காசுகளை யாருக்கு கொடுக்கவேண்டும் என்று முடிவு எடுக்க கூறினான்.

அனுமதி அளித்த அரசர்:

அரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து போட்டி என்று வந்துவிட்டாலே மிகவும் சுவையுள்ளதாக இருக்கும் என்று அரசர் கூறியபின் தெனாலியிடம் உன்னுடைய வித்தைகளையும் காட்டு என்று அனுமதி கொடுத்தார். இதை கேட்டதும் வித்தைக்காரன் மிகவும் கோபம் அடைந்தான்.

வித்தைக்காரன் தெனாலியிடம் உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும் என்பதை செய்து காட்டு. நீ செய்யும் அனைத்து வித்தைகளையும் உனக்கு நான் செய்து காட்டுகிறேன் என்று தைரியமாக சவால் விட்டான்.

வித்தைகளை செய்யும் தெனாலி:

தெனாலி செய்ய போகும் வித்தைகளை அனைவரும் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர். தெனாலி அரசர் முன் எந்தவித தயக்கமும் இல்லாமல் எல்லா வித்தைகளையும் நான் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். வித்தைக்காரனிடம் நான் கண்களை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நீங்கள் கண்களை திறந்து செய்யவேண்டும் என்று கூறினான்.

இந்த வித்தையை உங்களால் செய்யமுடியவில்லை என்றால் அரசர் கொடுக்கும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்கு தரவேண்டும் என்று கூறினான் தெனாலி.

newதெனாலியின் ராஜகுரு நட்பு தோன்றிய கதை..! Thenaliraman Story In Tamil..!

திறமையை வெளிக்காட்டிய தெனாலி:

தெனாலியை அலட்சியப்படுத்திய வித்தைக்காரன் நீ கண்களை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்ணை திறந்தவாறு செய்யவேண்டும் அவ்வளவுதானே நீ செய்துகாட்டு நான் செய்கிறேன் என்று கூறினான்.

தெனாலி உடனே அரசரை வணங்கி கீழே அமர்ந்துவிட்டான். தெனாலி தன் திறமையால் கண்களை மூடிக்கொண்டு மணல்களை அள்ளி கண்களின் மேல் கொட்டிவிட்டான்.அரசர் மற்றும் அங்குள்ள அனைவரும் ஆரவாரம் செய்து சிரித்தனர்.

தோற்றுப்போய் நின்ற வித்தைக்காரன்:

தெனாலிராமன் தன் கண்கள் மேல் உள்ள மணல்களை தட்டிய பிறகு வித்தைக்காரனிடம் கண்களை திறந்து வைத்து செய்யும்படி கூறினான். வித்தைக்காரன் இது எப்படி என்னால் முடியும் நான் தோற்றுப்போய் விட்டேன் என்று தலை குனிந்து போய் நின்றான்.

அரசர் தெனாலிராமனை அழைத்து அவனை பற்றி தெரிந்துகொண்டார். தெனாலியின் திறமையை பாராட்டி ஐநூறு பொற்காசுகளை பெற்றுக்கொள் என்று அரசர் தெனாலியிடம் கூறினான்.

மன்னிப்பு கேட்ட தெனாலி:

tenali raman kathaiஅரசரிடம் இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வமாக பேசினான். இவனுடைய கர்வத்தை அடக்கவே நான் வித்தைக்காரன் என்று பொய் கூறினேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று தெனாலி அரசரிடம் கேட்டான். அந்த ஆயிரம் காசுகளை வித்தைக்காரனுக்கே கொடுக்கும்படி கூறினான்.

ஆஸ்தான விகடகவி பெற்ற தெனாலி:

tenali raman kathaiஅரசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தெனாலி கூறியபடியே வித்தைக்காரனுக்கு பரிசை அளித்தார். அதன்பின்னர் தெனாலி ராமனிற்கும் பரிசளித்து தெனாலியை அரசர் தன் ஆஸ்தான விகடகவியாக அரண்மனையில் அமர்த்தினர்.

 

newதமிழ்நாட்டின் சிறப்புகள்..! Tamil Nadu Famous Food Places..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil