Augmentin 625 Tablet Uses in Tamil
மருந்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தாலும், அதனை பயன்படுத்துவதற்கு முன்பு அதனை பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதாவது, நாம் அனைவருமே ஏதோவொரு உடல்நல பிரச்சனையால் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டு வருவோம். ஆனால், மருந்தாக இருந்தாலும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு அதிகமான மருந்து நம் உடலில் சேர்வதால் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
மருந்து உட்கொள்ளும்போது, அதனை பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். அதாவது, மருந்தின் பயன்கள், பக்கவிளைவுகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். அப்படி நீங்கள் Augmentin 625 மாத்திரையை பயன்டுத்துபவர்கள் என்றால் அம்மருந்து எதற்கெல்லாம் பயன்படுகிறது. அம்மருந்தினால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா.? என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
குறிப்பு: மருத்துவரின் அறிவுரை இல்லாமல் எந்த மாத்திரையும் நீங்களாக பயன்படுத்த கூடாது..!
What is Augmentin 625 mg used For:
பயன்கள்:
Augmentin 625 மாத்திரை ஆனது, பெரும்பாலும் பாக்டீரியா தொற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இம்மருந்து நுரையீரல், சுவாசக் குழாய், தோல், நடுத்தர காது, சைனஸ் மற்றும் சிறுநீர் பாதை ஆகியவற்றின் தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக தொண்டை அழற்சி, சுபவாதம், மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றிக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது.
பயன்படுத்தும் நேரம்:
பெரும்பாலும் இம்மருந்து காலை மற்றும் இரவு வேலையில் உணவு உண்ணபிறகு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
டாக்ஸி மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா..?
பக்கவிளைவுகள்:
- வயிற்றுப்போக்கு
- காய்ச்சல்
- குளிர் அல்லது காய்ச்சல் அறிகுறிகள்
- இருமல்
- சுவாசப்பிரச்சனை
- தோல் எரிச்சல் மற்றும் தடித்தல்
- மூட்டு வலி
- மஞ்சள் காமாலை
- குழப்பம் அல்லது பலவீனம்
- அடர் நிற சிறுநீர்
- உணர்வின்மை
- தசை பலவீனம்
இதுபோன்ற பக்கவிளைவுகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
மருந்து எவ்வளவு நேரம் நீடிக்கும்.?
Augmentin 625 மாத்திரை உட்கொண்ட 1.5 முதல் 2 மணி நேரம் வரை இதன் விளைவு நீடிக்கும்.
எத்தனை நாள் எடுத்து கொள்ளலாம்.?
Augmentin 625 மாத்திரையை அதிகபட்சம் 2 வாரங்களுக்கும் மேலாக அதை எடுத்துக்கொள்ள கூடாது.
Cipmox 500 மாத்திரையை யாரெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா
இதுபோன்ற மருந்து மாத்திரைகளின் பயன்கள் மற்றும் பக்கவிளைவுகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | மருந்து |