களவும் கற்று மற என்ற பழமொழிக்கான உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

Advertisement

Kalavum Katru Mara Meaning in Tamil

நமது அன்றாட வாழ்க்கையில் பல சொற்களை அல்லது வாக்கியங்களை ஏன் பல பழமொழிகளை  கூறியிருப்போம். அப்படி நம்மில் பலரும் அடிக்கடி கூறுகின்ற ஒரு பழமொழியான களவும் கற்று மற இதற்கான உண்மையான அர்த்தம் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். அப்படி உங்களுக்கு இந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தம் தெரிந்தால் பரவாயில்லை. மாறாக பழமொழிக்கான உண்மையான அர்த்தம் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. இன்றைய பதிவில் களவும் கற்று மற என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்று கூறுவதற்கான உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா

பழமொழிக்கான உண்மை அர்த்தம்:

 Kalavum Katru Mara Real Meaning in Tamil

பொதுவாக நாம் பல பழமொழிகளை கேட்டிருப்போம் சில சமயங்களில் நாமே கூறியும் இருப்போம். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது.

அதேபோல தான் களவும் கற்று மற என்ற பழமொழியையும் கூறியிருப்போம். ஆனால் அதற்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெரிந்திருக்காது. இந்த பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்னவென்றால்,

 “களவும் கத்தும் மற”என்பது தான் உண்மையான பழமொழி என்று பல குறிப்புகள் கிடைக்கின்றன. “கத்து” என்ற சொல்லுக்கு பொய் என்று அர்த்தமும் உண்டு. களவும், பொய் சொல்வதையும் தவிர்த்து விடு என்பதை வலியுறுத்தும் பழமொழி இது. 

இதையும் படித்துப்பாருங்கள்=> ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா

இதற்கு இன்னொரு அர்த்தமும் உண்டு. அது என்னவென்றால், சங்க இலக்கியங்களில் அகவாழ்க்கையை இரண்டு விதமாகப் பிரித்து  கூறுவார்கள். அதாவது களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை என்று பிரித்து கூறுவார்கள்.

இதில் களவு என்பது காதல் வாழ்க்கையையும், கற்பு என்பது திருமண வாழ்க்கையையும் குறிக்கும். திருக்குறளில் கூட களவியல், கற்பியல் என்ற அதிகாரங்கள் உண்டு.

ஆகையால் இங்கு களவு என்பது காதல் வாழ்க்கையைக் குறிக்கும். காதல் வாழ்க்கையைக் கடந்து திருமண வாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமென்று அறிவுறுத்தும் அர்த்தத்தில் இந்தப் பழமொழி அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com

 

Advertisement