UPI Pin Meaning in Tamil – UPI பின் என்பதன் தமிழ் பொருள்..!

Advertisement

UPI Pin Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் UPI என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். UPI Pin என்பது ஒரு வங்கி கணக்கில் இருந்து, இன்னொரு வங்கி கணக்கிற்கு பணம் பரிவர்த்தனை செய்வதற்கு பயன்படும் ஒரு எண் ஆகும். இந்த UPI உருவான கதையை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

UPI என்றால் என்ன?

இந்த UPI  என்பதன் ஆங்கில விரிவாக்கம்  Unified Payments Interface  அதாவது ஒருங்கிணைந்த பணப் பகிரி — அண்மையில் இந்திய அரசு கொண்டு வந்த நிதிச் சேவை இது. பணப் பரிமாற்றத்தில் அடுத்த கட்டம் என இதனைச் சொல்லலாம். இந்த சேவை உருவாக்குவதற்கு முன்பே ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் பரிவதனை செய்வதற்கு மூன்று முறைகள் இருந்ததாம் அவை NEFT, RTGS மற்றும் IMPS என்று மூன்று முறைகள் இருந்திருக்கிறது. இருப்பினும் இந்த சேவைகளை நாம் வங்கி செயல்படும் நேரம் வரைதான் பயன்படுத்தமுடியும். அதுமட்டுமில்லாமல் இதற்கு நிறைய விதிமுறைகள் இருந்ததாம். குறிப்பக குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை தான் பணம் பரிவத்தனி செய்ய முடியும். அதன்பிறகு Immediate Payment Service (IMPS) இதன் அடிப்படை கொண்டுதான் UPI Pin உருவானதால்.

இந்த UPI Pin சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்புகிறீர்கள் என்றால் அதற்கு கட்டணம் இல்லை. அது மட்டும் இல்லாமல் 24 மணிநேரம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்யலாம். முன்பெல்லாம் ஒருவருக்கு நாம் பணம் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அவர்களது பெயர், அவர்களது வங்கி கணக்கு எண், அவர்களது வங்கியின் IFSC எண் என்று அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்த UPI சேவையில் அதுமாதிரி ஒன்றும் இல்லை.

UPI சேவையை பயன்படுத்துவது மிகவும் எளிமை. அதாவது உங்கள் வங்கி கணக்கிற்கு என்று official App வச்சிருப்பாங்க கண்டிப்பாக.. ஆக அந்த Official App-ஐ டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். பின் அவற்றில் UPI என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அவற்றில் சென்று தங்களுக்கென்று ஒரு UPI பின்னை செட் செய்து கொள்ளுங்கள்.

இதுமட்டுமில்லாமல் GPay, Paytam, Phonepe இன்று நிறைய App UPi-ஐ வரவேற்கும் வகையில் நிறைய சேவைகளை வழங்குகிறது.

UPI எப்படி பயன்படுத்துவது?

இந்த UPI பின்னை நீங்கள் செட் செய்ய வேண்டும் என்றால், முதலில் உங்கள் வங்கி கணக்குடன் உங்கள் மொபைல் எண்ணினை இணைக்க வேண்டும். அதன்பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கென்று ATM இருக்கும் அதனை நீங்கள் கண்டிப்பாக அப்ளை செய்து பெற்றிருக்க வேண்டும். மூன்றாவதாக உங்கள் UPI Pin-ஐ செட் செய்யும் சமையத்தில், நீங்கள் வங்கி கணக்குடன் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு கண்டிப்பாக ஒரு SMS வரும், ஆகவே உங்கள் மொபைல் எண் செயல்பாட்டில் இருக்க வேண்டும். இந்த மூன்று விஷயத்தையும் நீங்கள் கண்டிப்பாக செய்திருந்தால் மிகவும் எளிதாக உங்களது UPI பின்னை நீங்கள் எளிதாக செட் செய்ய முடியும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement