நெல்லிமுள்ளி ஹேர் டை செய்முறை | Amla Hair Dye in Tamil
Amla Hair Dye in Tamil – உங்களுக்கு நரை முடி பிரச்சனை இருக்கா? என்ன ட்ரை செய்தாலும் நரை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்க மாட்டேங்குதா? இதன் காரணமாக ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றீர்களா? அப்படியென்றால் இன்றுடன் உங்கள் கவலையை விடுங்கள்.. உங்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். ஆம் நண்பர்களே உங்கள் நரை முடி பிரச்சனைக்கு தீர்வளிக்கும் வகையில் நெல்லிமுள்ளியை வைத்து ஒரு ஹேர் டை தயார் செய்வதை பற்றி தான் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம்.
நெல்லிமுள்ளி என்பது என்ன என்பதில் உங்களுக்கு ஒரு குழப்பம் இருக்கும். நெல்லிமுள்ளி என்பது வேறு ஒன்றும் இல்லை நெல்லிக்காய் தான். ஆனால் அதனை உடைத்து வெயிலில் காய வைத்து விற்பனை செய்கின்றன. இதனுடைய விலையும் குறைவாக தான் இருக்கும், அனைத்து நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். சரி வாங்க இந்த நெல்லிமுள்ளியை வைத்து ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
தேவையான பொருட்கள்:
- நெல்லிமுள்ளி – 100 கிராம்
- தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- தண்ணீர் – 1 1/2 டம்ளர்
- இரும்பு வாணலி – ஒன்று
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஓமவல்லி இலை நரை முடியை கருமையாக்குமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!
செய்முறை:
டிப்ஸ்: 1
அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து அதில் 100 கிராம் நெல்லிமுள்ளியை சேர்க்கவும். பின் அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் இடைவிடாது வதக்கவேண்டும்.
டிப்ஸ்: 2
இவ்வாறு வதக்கும்போது நெல்லிமுள்ளியின் நிறம் கொஞ்சம் கருமையாகும் 10 நிமிடம் கழித்து 1 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
டிப்ஸ்: 3
பிறகு அந்த தண்ணீர் ஒரு டம்ளர் அளவு சுண்டும் வரை கொதிக்க வைக்கவும்.
டிப்ஸ்: 3
அவற்றில் இருக்கும் தண்ணீர் ஓரளவு நமக்கு சுண்டிய பிறகு அடுப்பை அணைத்து அதனை நன்றாக ஆறவைக்கவும்.
டிப்ஸ்: 4
நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளவும்.
டிப்ஸ்: 5
பிறகு ஒரு பவுலுக்கு அதனை மாற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது ஹேர் டை தயார் இதனை வடிகட்டி அவற்றில் இருக்கும் சாறை மட்டும் தலையில் அப்ளை செய்யலாம் அல்லது பேஸ்ட்டை வடிகட்டி அப்படியே தலையில் அப்ளை செய்யலாம். உங்களுக்கு எது விருப்பமோ அப்படி செய்துகொள்ளுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!
டிப்ஸ்: 6
மேல் கூறப்பட்டுள்ள இரண்டு முறையில் ஏதாவது ஒன்றை செய்த பிறகு 1 அல்லது 2 மணி நேரம் வரை தலையில் நன்றாக ஊறவைக்கவும். பின் தலைக்கு ஹெர்பல் ஷாம்பு பயன்படுத்தி தலை அலசலாம். இவ்வாறு வாரத்தில் ஒரு முறை என்று ஒரு மாதம் வரை செய்து வந்தால் நரை முடி முழுவதும் கருமையாக மாறிவிடும்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |