7 நாட்களில் முகம் வெள்ளையாக டிப்ஸ்..! Beauty Tips For Face at Home in Tamil..!
சரும அழகை அதிகரிக்க பொதுவாக அனைவரும் விரும்புவோம், அந்த வகையில் கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட ஃபேஸ் கிரீமை பயன்படுத்துவதற்கு பதில், இயற்கையான முறையில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி சரும அழகை பராமரிக்கும் போது, சருமம் என்றும் இளமையுடனும், பொலிவுடனும் இருப்பதுடன் சருமத்திற்கு எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. அந்த வகையில் 7 நாட்களில் முகம் வெள்ளையாக மற்றும் ஜொலிக்க வைக்கும் பேசியல் டிப்ஸினை இப்பொழுது படித்தறியலாம் வாங்க.
முகத்தை இயற்கையான முறையில் அழகுபடுத்த கீழ் கொடுக்கப்பட்டுள்ள பேஷியலை step by step ஆக எப்படி செய்யலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
கேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்..! |
Beauty Tips For Face at Home in Tamil..!
ஸ்டேப்: 1
Face Cleanser & Scrub:-
தேவையான பொருட்கள்:-
- கடலை மாவு – 5 to 6 டேபிள் ஸ்பூன்
- முல்தானிமெட்டி – 3 டேபிள் ஸ்பூன்
- நீம் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- அதிமதுரம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
- ஆரஞ்சு தோல் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
ஒரு சுத்தமான பவுல் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது face cleanser செய்வதற்கு பவுடர் தயார்.
பின் இவற்றை ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் இந்த பவுடரை சேர்த்து தினமும் பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் முறை:-
ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் நாம் தயார் செய்த பவுடரை ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 2 அல்லது 3 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த கலவையை சருமத்தில் நன்றாக அப்ளை செய்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் பருக்களினால் ஏற்படும் தழும்புகள் மறையும், மேலும் சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி முகம் வெள்ளையாக மாறும்.
ஸ்டேப்: 2
Ice Cube Facial Toner:-
முகத்திற்கு ஐஸ் கட்டிகள் மூலம் மசாஜ் செய்யும் பொழுது சருமம் மென்மையாகவும், மிருதுவாகவும் காணப்படும். மேலும் முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி சருமம் மிகவும் பொலிவாக காணப்படும் எனவே முகத்திற்கு ஐஸ் கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வது மிகவும் சிறப்பாகும். அதிலும் அரிசி கழுவிய நீரில் ஐஸ் கட்டிகளை உருவாக்கி மசாஜ் செய்யும் பொழுது இன்னும் அதிக பலன் கிடைக்கும்.
அதாவது ஒரு கப் அரிசி கழுவிய நீரில் 6 துளிகள் டீ ட்ரீ ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் பின் ஐஸ் ட்ரேயில் ஊற்றி ப்ரிட்ஜியில் வைக்கவும். பின் ஐஸ் கட்டியாக உறைந்த பின் முகத்தில் இந்த ஐஸ் கட்டிகளை பயன்படுத்தி மசாஜ் செய்யுங்கள்.
ஸ்டேப்: 3
Face Pack:
பேசியல் செய்ய தேவையான பொருட்கள்:-
- முல்தானி மெட்டி – 3 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- காபி பவுடர் – 1/2 ஸ்பூன்
- தக்காளி சாறு – 2 ஸ்பூன்
- தயிர் – 1 ஸ்பூன்
செய்முறை:-
மேல் கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு சுத்தமான பவுலில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் ஃபேஷ்பேக்கை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும். பின் சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினால் சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கும், முகம் என்றும் வெள்ளையாகவும் பொலிவுடனும் இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |