முகத்தில் எண்ணெய் பசை நீங்க இயற்கை டிப்ஸ்கள்..! Beauty Tips for Face in Tamil..!
ஹாய் ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் பெண்கள் மிகவும் எதிர்பார்க்கும் ஒரு அழகு குறிப்பு டிப்ஸ்களை(Face Brightness Tips In Tamil) இன்னக்கி பார்க்கப்போறோம். பெண்கள் சிலபேருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் பசை இருந்துக்கொண்டே இருக்கும். அது சிலபேருக்கு புடிக்காது. எண்ணெய் பசை போக வழியே இல்லன்னு யோசிக்கிறீங்களா..! அந்த எண்ணத்தை கண்டிப்பா மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்காகவே முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை நீக்க பல இயற்கை டிப்ஸ்கள் இதோ..!
எண்ணெய் பசை நீங்க Tips 1 – தேவையான பொருட்கள்:
- முட்டை வெள்ளைக்கரு
- எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
அழகு குறிப்பு 1:
முதலில் சிறிய பவுலில் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து முட்டையின் வெள்ளைக்கருவை நன்றாக நுரை வரும் அளவிற்கு அடிக்கவும்.
அடுத்ததாக நன்றாக கலந்து வைத்துள்ள முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எலுமிச்சை சாறு சேர்த்தபிறகு நன்றாக இரண்டையும் மிக்ஸ் செய்துக்கொள்ளவும்.
மிக்ஸ் செய்த பிறகு இதை முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக வாஷ் பண்ணிக்கலாம்.
இந்த டிப்ஸை வாரத்தில் 2 அல்லது மூன்று முறை செய்து வந்தால் கண்டிப்பா முகத்தில் எண்ணெய் பசை பிரச்சனை வராது.
எண்ணெய் பசை நீங்க Tips 2 – தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் – 2 டீஸ்பூன்
- தேன் – 1 டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
அழகு குறிப்பு 2:
ஒரு சிறிய பவுலில் 2 டீஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளவும்.
அடுத்ததாக எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். இது மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்துகொள்ளவும்.
நன்றாக மிக்ஸ் செய்த பிறகு முகத்தில் 10 நிமிடம் தடவி வைக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து தண்ணீரில் வாஷ் செய்துகொள்ளலாம்.
முகத்தில் பரு இருப்பவர்கள் மெதுவாக மசாஜ் செய்து வாஷ் செய்யுங்கள். இந்த டிப்ஸை வாரத்தில் 2 முறை செய்து வந்தால் கண்டிப்பா முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி(Beauty Tips For Face In Tamil Natural)முகம் பொலிவோடு காணப்படும்.
முகத்தில் எண்ணெய் பசை நீங்க Tips 3:
- கற்றாழை ஜெல்
அழகு குறிப்பு 3:
முகத்தில் இருக்கும் எண்ணெய் பசையை போக்க கற்றாழை ஜெல் நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.
இந்த கற்றாழை ஜெல்லை இரவில் தடவி வைத்துவிட்டு பிறகு காலையில் முகத்தை நன்றாக வாஷ் செய்து கொள்ளலாம்.
கற்றாழை ஜெல் எண்ணெய் பசை உள்ளவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். இந்த டிப்ஸை வீட்ல கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நல்ல மாற்றம் கிடைக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |