முகப்பரு, கருமை சருமத்திற்கு சூப்பர் டிப்ஸ்..! Beetroot Face Pack For Skin Whitening In Tamil..!
Face Pack For Whitening The Skin: வணக்கம் தோழிகளே..! இன்றைய பதிவில் முகத்தில் வரும் பருக்களினால் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் நீக்குவதற்கு ஒரு அருமையான டிப்ஸ் படித்து தெரிந்துக்கொள்ளலாம். பெண்களுக்கு சாதாரணமாகவே சருமத்தில் பருக்கள் ஏற்படுவது வழக்கம் தான். அந்த பருக்களானது நீண்ட நாள் முகத்தில் இருந்து நாளடைவில் அது கரும்புள்ளி மற்றும் தழும்புகளாக மாறிவிடுகிறது. இந்த விளைவினால் முக அழகு கெடுவதோடு இதற்கு பல கிரீம்களை உபயோகப்படுத்தி பல இளம்பெண்கள் தன் முக சருமத்தை பாழாக்கிக்கொள்கிறார்கள். தங்களுக்கு பயனுள்ள வகையில் வீட்டிலே சருமத்தில் ஏற்பட்டுள்ள பரு, கருந்திட்டுகளை நீக்க எளிமையாக பேஸ் பேக்கை எப்படி செய்யலாம் என்று படித்தறியலாம் வாங்க..!
![]() |
கருமை நீங்கி முகம் ஜொலிக்க / whitening face pack – தேவையான பொருள்:
- பீட்ரூட் – பாதி அளவு(நறுக்கியது)
- தண்ணீர் – 2 ஸ்பூன்
- சாதம் – 2 அல்லது 3 ஸ்பூன்
- ரோஸ் வாட்டர் – 2 அல்லது 3 ஸ்பூன்
- தேவைப்பட்டால் எலுமிச்சை மற்றும் தக்காளி சாறு சேர்க்கலாம்.
செய்முறை விளக்கம் 1:
முதலில் பீட்ரூட்டினை கழுவி பாதி அளவிற்கு எடுத்து கொள்ளவும். அடுத்து அதன் மேல் தோல் பகுதியினை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.
செய்முறை விளக்கம் 2:
மிக்ஸி ஜாரில் சேர்த்த பிறகு 2 ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவேண்டும். அரைத்த சாற்றினை வடிகட்டியால் வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும்.
செய்முறை விளக்கம் 3:
அடுத்ததாக பீட்ரூட் அரைத்த ஜாரிலே 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு சாதம் எடுத்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த சாதத்துடன் தனியாக எடுத்து வைத்த பீட்ரூட் சாற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
செய்முறை விளக்கம் 4:
அரைத்த பிறகு தனியாக பவுலில் எடுத்து கொள்ளவும். இவற்றில் ரோஸ் வாட்டர் 2 அல்லது 3 ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கலந்து கொள்ளவும்.
![]() |
பயன்படுத்தும் முறை:
அவ்ளோதாங்க இந்த பேஸ் பேக். இந்த பேஸ் பேக்கை முகத்திலிருந்து கழுத்து பகுதி வரையிலும் தடவிவர வேண்டும். 20 முதல் 30 நிமிடம் வரை வைத்திருந்து சோப் எதுவும் பயன்படுத்தாமல் சாதாரண நீரில் முகத்தினை வாஷ் செய்யலாம்.
இந்த பேஸ் பேக்கை இரவு படுக்கைக்கு முன்பு தடவி வைத்து சிறிது நேரம் பின்னர் வாஷ் செய்தால் முகத்திற்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
இந்த பேஸ் பேக் முகத்திற்கு நிரந்தர தீர்வு அளிக்கக்கூடிய ஒன்று. முகத்தில் பரு, கரும்புள்ளிகள், அழுக்குகள் மறைய ஒரு முறை போட்டாலே போதும். நல்ல மாற்றம் விரைவிலே தெரியும்.
குறிப்பு:
இந்த பேஸ் பேக்கில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது தக்காளி சாறு சேர்க்கலாம். முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் எலுமிச்சை சாறு அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த டிப்ஸை ஆண்/பெண் இருபாலரும் தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் கருமையான முகம் கண்டிப்பாக வெள்ளையாக மாறும்.
பீட்ரூட்டில் இருக்கக்கூடிய சத்துக்கள்:
பீட்ரூட்டில் அதிகமாக வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது. வைட்டமின் சி சத்தானது முகத்தில் உள்ள கருமையினை நீக்குவதற்கு உதவியாக இருக்கிறது.
பீட்ரூட்டினை அதிகமாக பயன்படுத்தி வருவதால் உடலில் தோல் சுருக்கம் குறைந்து எப்போதும் இளமையாக காட்சி அளிப்பீர்கள்.
நாம் உண்ணும் சாதமானது நமது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புது செல்களை உற்பத்தி செய்யும். இதனால் தோல் சுருக்கம் குறைய தொடங்கும். முகமும் நல்ல பளிச்சென்று இருக்கும்.
![]() |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |