இயற்கை ஹேர் டை தயாரிப்பது எப்படி.?
இன்றைய கால கட்டத்தில் இளம் வயதினருக்கே நரை முடி பிரச்சனை ஏற்படுகின்றது. நரை முடியை மறைப்பதற்காக கடையில் விற்கும் ஹேர் டையை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் முடிக்கும், ஆரோக்கியத்திற்கும் தீமையை கொடுக்கும். அதனால் இயற்கையான முறையில் வீட்டிலேயே ஹேர் டையை தயாரித்து நரை முடியை மறைக்கலாம். அது எப்படி என்று இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்.
கருஞ்சீரகம் ஹேர் டை:
கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன.அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து வதக்கவும். அதனுடன் 2 தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து வதக்கவும். வதக்கும் பொருட்கள் ரோஸ்ட் ஆகும் வரை வதக்கவும். பிறகு வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பவுடராக அரைத்து தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
கருஞ்சீரக பவுடருடன் கற்றாழை ஜெல் 1 தேக்கரண்டி, 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து டை போல் மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இந்த ஹேர் டையை தலை முடி முழுவதும் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து பிறகு தலை தேய்த்து குளிக்கவும். இந்த பேக்கை வாரத்தில் ஒரு நாள் என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் நரை முடி கருப்பாக மாறிவிடும்.
காடு போல முடி வளர வெந்தயம் மட்டும் போதும்..
நரை முடிக்கு எலுமிச்சை:
ஒரு எலுமிச்சை பழத்தை தோலோடு சிறியதாக நறுக்கி கொள்ளவும். அதனுடன் நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை தலையில் தடவி 1/2 மணி நேரம் வைத்திருந்து தலை தேய்த்து குளிக்கவும்.
ரொம்ப வெள்ளை முடி இருக்கா..? நிரந்தரமாக இயற்கை முறையில் கருமையாக மாற்றலாம்..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |