வெள்ளையாக இருக்கும் தலை முடியில் இதை மட்டும் தடவுங்க அப்புறம் எப்படி இருக்குனு பாருங்க

Advertisement

முடி கருப்பாக என்ன செய்வது | Black Hair Oil Name in Tamil

வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் தலைமுடி கருப்பாக ஆவதற்கு என்ன செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். முன்னாடி எல்லாம் வயதானால் முடி வெள்ளையாகும். ஆனால் இப்போது அப்படி இல்லை. ஆண், பெண் என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முடி வெள்ளையாகிறது. முடி மீது அனைவருக்குமே ஆசை இருக்கும். பெண்களுக்கு தான் அதிக ஆசை இருக்கும். முடி நிறைய இருக்கனும் அதுமட்டுமில்லாமல் முடி நல்லா கருப்பா இருக்க வேண்டும். ஆனால் வயதாக வயதாக முடி நரைக்க ஆரம்பித்துவிடும். முடி வெள்ளையாக இருந்தால் வெளியில் செல்வதற்கே கஷ்டப்படுவார்கள். இனி அந்த மாதிரி கஷ்டப்பட வேண்டாம். வாங்க முடி வெள்ளையாவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்பபோம்.

முடி உதிர்வதை தடுக்க இந்த ஒன்று போதும் அது என்னவென்று தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படியுங்கள்⇒ குப்பையில் வீசி எரியும் இந்த 1 பொருள் போதும் முடி உதிர்வதை தடுக்க

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்:

முடி கருப்பாக மாறுவதற்கு நிறைய கெமிக்கல் நிறைந்த பேஸ்டுகளை தடவுகிறோம். ஆனால் அப்படி தடவும் போது நமக்கு உடலில் நோய்களை ஏற்படுத்தும். அதனால்  நரை முடி கருப்பாகுவதற்கு வீட்டில் இருந்தே எண்ணெய் செய்து முடியை கருப்பாக மாற்றலாம். வாங்க எப்படி என்று தெரிந்துகொள்வோம்.

தேவையான பொருட்கள்:

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்

  • கார்போக அரிசி – 50 கிராம் 
  • கருவேப்பிலை – 1 கையளவு 
  • நெல்லிமுள்ளி – 50 கிராம்
  • தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்

செய்முறை:

முதலில் கார்போக அரிசியை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

முடி கருப்பாக என்ன செய்வது

 

அடுப்பில் வாணலியை வைக்க வேண்டும். அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.

பின்பு அரைத்து வைத்திருக்கும் பொடி, கருவேப்பிலை, நெல்லிக்காய் முள்ளி மூன்றையும் சேர்க்கவும். அடுப்பை குறைவான தீயிலே வைத்து 10 நிமிடம் வரை எண்ணெய் சூடாக வேண்டும்.

முடி கருப்பாக என்ன செய்வது

நம் எண்ணெயில் சேர்த்திருக்கும் பொருட்கள் எல்லாம் சேர்ந்து நிறம் மாறும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த எண்ணெய் காய்ச்சிய பிறகு ஒரு 8 மணி நேரம் அப்படியே இருக்கட்டும்.

அதன் பிறகு காய்த்த எண்ணெயை ஒரு பாட்டிலில் வடிகட்டி ஊற்றி வையுங்கள். மூன்று மாதம் வரைக்கும் இந்த எண்ணெய் கெட்டுப்போகாது.

தலைக்கு எண்ணெய் தேய்க்கும் முறை:

நரை முடி கருப்பாக மாற எண்ணெய்

தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பது போலவே இந்த எண்ணெயும் தேய்த்து கொள்ளவும். வெளியில் செல்லும் போது தலையில் எண்ணெய் அதிகமாக இருக்கும் என்று நினைப்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வைக்கலாம்.

இப்படி நீங்கள் தேய்த்து வர விரைவிலே வெள்ளையான முடி கருப்பாக மாறிவிடும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement