கழுத்தில் உள்ள கருமை மறைய சூப்பர் டிப்ஸ்..! Dark Neck Tips Home Remedies..!
அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெண்களுக்கு கழுத்தில் இருக்கும்(Dark Neck Remove Tips) கருமையை போக்குவதற்கான ஒரு அருமையான டிப்ஸ் தான் இன்று நாம் பார்க்க போகிறோம். நிறைய பெண்களுக்கு கழுத்தில் கருமை பிரச்சனை இருக்கிறது. இந்த கருமை பிரச்சனை கடைசி வரையிலும் இருக்கும் என்று பலரும் கவலை கொள்கிறார்கள். இனி அந்த கவலையே வேண்டாம் அதனை சரி செய்ய இதோ சூப்பரான டிப்ஸ் காத்திருக்கிறது அனைவரும் படித்து கழுத்தில் கருமை உள்ளவர்கள் இந்த டிப்ஸை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
![]() |
Neck Black Remove Tips in tamil Language
கழுத்து கருமை நீங்க – தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
- தண்ணீர்
- கடலை மாவு – 2 டீஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் – 1 சிட்டிகை
- மாய்ஸ்ட்டுரிசெர் அல்லது சன்ஸ் கிரீம்
கழுத்து கருமை போக – டிப்ஸ் 1:
முதலில் ஒரு பவுலில் 2 டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளவும். அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது கலந்த கலவையை கருமை உள்ள இடத்தில் பொறுமையாக தடவி வர வேண்டும். இதனை கழுத்தில் 2 அல்லது 3 நிமிடம் வரை தேய்த்து வர வேண்டும். நன்றாக அப்ளை செய்த பிறகு 10 அல்லது 15 நிமிடம் வைத்திருக்க வேண்டும். 10 நிமிடம் பிறகு துணியால் துடைத்து கொள்ளலாம். இப்போது கழுத்தில் இருக்கும் பிக்மெண்ட்ஸ்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
![]() |
கழுத்தில் கருப்பு நீங்க – டிப்ஸ் 2:
முதலில் பவுலில் வீட்டில் இருக்கும் கடலை மாவை 2 டீஸ்பூன் அளவு எடுத்து கொள்ளவும். அடுத்ததாக கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு சேர்த்து கொள்ளவும். பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து எடுத்து கொள்ளவேண்டும். இப்போது இந்த பேஸ்டை கழுத்தில் கருமை உள்ள இடங்களில் தடவ வேண்டும். இந்த டிப்ஸை வாரத்தில் 1 முறை செய்து வரலாம். அடுத்து 10 நிமிடம் காயவைத்து பின்னர் துணியால் துடைக்க வேண்டும். இந்த டிப்ஸ்லயும் கண்டிப்பா உங்களுடைய கழுத்து கருமை நீங்கும்.
கடைசியாக கழுத்தில் மாய்ஸ்ட்டுரிசெர் அல்லது சன்ஸ் கிரீமை தடவி வர வேண்டும். பேக்கிங் சோடா பயன்படுத்தி இருப்பதால் எரிச்சல் உண்டாகும். அந்த எரிச்சல் பிரச்சனை குணமாக இந்த கிரீமை பயன்படுத்த வேண்டும்.
உடனடியாக வெளியில் சில நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது கழுத்தில் கருமை இருப்பவர்கள் கழுத்தில் தண்ணீர் மட்டும் ஊற்றி ஸ்க்ரேபர் மூலம் தேய்த்து கருமையை அகற்றலாம். இந்த டிப்ஸை எல்லாரும் யூஸ் பண்ணி பாருங்க. கருமை உள்ள கழுத்தில் நல்ல மாற்றம் கிடைக்கும்.
![]() |
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |