புருவம் அழகு பெற
பெண்கள் எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும் புருவமும், கண் இமைகளும் அழகாக இருந்தால் தான் முகம் அழகாக இருக்கும். புருவத்தை அழகுபடுத்துவதற்கு பார்லர்க்கு சென்று அழகுபடுத்துவார்கள். சில நபர்களுக்கு புருவம் முடிகள் இருக்காது. புருவம் அடர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். புருவம் அடர்த்தியாக வளர கடைகளில் விற்கும் பொருட்களை பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்தும்போது முகத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். முகத்திற்கு அழகு சேர்ப்பதில் புருவமும், கண் இமைகளும் முக்கிய பங்கு இருக்கிறது. அதனால் வாங்க எப்படி அழகாக்குவது என்று தெரிந்துகொள்வோம் வாங்க..
இதையும் படியுங்கள் ⇒ பெண்கள் வீட்டில் இருந்தபடியே மீசை முடியை போக்குவதற்கு சில டிப்ஸ்
புருவ முடி அடர்த்தியாக வளர எண்ணெய் செய்ய தேவையான பொருட்கள்:
- விளக்கெண்ணெய் – 1 தேக்கரண்டி
- தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
- ஆலிவ் எண்ணெய் -1 தேக்கரண்டி
- விட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1
எண்ணெய் செய்முறை:
முதலில் ஒரு பவுல் எடுத்து கொள்ளவும். அதில் விளக்கெண்ணெய் 1 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி, ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி, வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் 1 மூன்றையும் சேர்க்கவும்.
மூன்றையும் நன்றாக கலக்கவும். கலந்த பின்னர் ஜெல் போல பதம் வந்துவிடும். அவ்ளோ தாங்க நமக்கு இப்போது எண்ணெய் கிடைத்துவிட்டது.
அப்ளை செய்யும் முறை:
தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள். கழுவிய பின்னர் ஈரம் இல்லாமல் முகத்தை துடைத்து கொள்ளவும். நாம் செய்து வைத்த ஜெல்லை புருவ முடி மற்றும் கண் இமைகளில் தடவவும்.
இந்த ஜெல்லை தொடர்ந்து தேய்த்து வாருங்கள். எந்த பொருளையும் தடவிய உடனே அதற்கான Solution கிடைக்காது. அதே போல் இந்த ஜெல்லையும் 1 மாதம் தொடர்ந்து போட்டு வாருங்கள். அதன் பிறகு நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.
இந்த குறிப்பில் சொல்லப்பட்டிருக்கின்ற எண்ணெய்கள் கலப்படம் இல்லாத தரமான எண்ணெய்களாக இருக்க வேண்டும்.
விளக்கெண்ணெய் முடி வளர:
புருவ முடி அடர்த்தியாக வளர்வதற்கு இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரும்பு சத்து குறைபாட்டினால் கூட புருவ முடி வளராது. வெறும் விளக்கெண்ணெய் மட்டும் தினமும் இரவு தூங்குவதற்கு முன் தடவி வரலாம். 1 மாதம் தொடர்ந்து தடவி வந்தால் மாற்றத்தை காணலாம்.
மேல் கூறப்பட்டுள்ள குறிப்பு புருவங்கள் மற்றும் கண் இமைகளை அழகாக பெற உதவி செய்யும். பயன்படுத்தி பாருங்கள் நண்பர்களே..!
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tami |