உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை 2 நாட்களில் மறைய செய்ய இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Foot Crack Home Remedy

ஆண்களை விட பெண்களுக்கே பாதவெடிப்புகள் அதிகம் காணப்படுகிறது. பெண்கள் எப்பொழுதும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. சிலருக்கு பாதவெடிப்பு மிகவும் அதிகமாக காணப்படும். பாதவெடிப்பினால் சிலருக்கு வலி கூட ஏற்படும். இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் நிறைந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துவீர்கள். ஆனால் இந்த பாதவெடிப்புகளை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சூடான நீர் எடுத்து கொள்ளவும்: 

சூடான நீர் எடுத்து கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு கல் உப்பு மற்றும் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு இவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். 

பிறகு இதில் உங்கள் பாதங்களை குறைந்தது 5 லிருந்து 10 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். பின் உங்கள் பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்குவதற்கு ஒரு ஸ்கிரப்பரை கொண்டு குதிங்கால்களை நன்றாக தேய்க்க வேண்டும். பின் கால்களை ஒரு துணியை கொண்டு துடைத்து கொள்ளுங்கள்.

ஒரே இரவில் பாதவெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

பாதவெடிப்பு நீங்க:

  1. வாழைப்பழம் – 1
  2. தேன் – 2 ஸ்பூன்
  3. சூடான நீர் – சிறிதளவு

வாழைப்பழ பேஸ்ட்

பழுத்த வாழைப்பழம் ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். வாழைப்பழ தோலை நீக்கி விட்டு பேஸ்ட் போல பிசைந்து கொள்ளுங்கள்.

பின் இந்த பேஸ்டை உங்கள் காலில் இருக்கும் பாதவெடிப்பு உள்ள பகுதிகள் மற்றும் விரல் இடுக்குகள் என்று பாதம் முழுவதும் இதை அப்ளை செய்து கொள்ளுங்கள்.

20 நிமிடம் அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் பாதங்களை கழுவி கொள்ளுங்கள்.

பாதங்களில் இருக்கும் வெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

 

பாதவெடிப்பு நீங்க

பிறகு பாதத்தை ஈரப்பதம் இல்லாமல் துடைக்க வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேன் எடுத்து கொள்ளவும். அதில் 2 அல்லது மூன்று சொட்டு வெதுவெதுப்பான நீரை விட்டு கலந்து கொள்ளவும்.

இதை உங்கள் பாதம் மற்றும் பாதங்களின் மேல்புறம் என்று கால் முழுவதும் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

இதுபோல தொடர்ந்தோ அல்லது வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் மறைந்து விடும்.

 வாழைப்பழம் பாதத்தை எப்பொழுதும் ஈரப்பதத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது. வாழைப்பழம் ஒரு இயற்கையான மாய்ஸ்சரைசர் ஆகும். இது பாதங்களை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது மட்டுமில்லாமல் தோல் வறட்சியைத் தடுக்க உதவுகிறது. தேன் ஒரு இயற்கை கிருமி நாசினியாக கருதப்படுகிறது. இது பாதங்களில் வெடிப்புகளை குணப்படுத்த உதவுகிறது. 

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement