3 நாட்களில் பாதவெடிப்பு முற்றிலும் மறைய இந்த 3 பொருள் மட்டும் போதும்..!

Advertisement

Foot Crack Remedies

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் பாதவெடிப்பும் ஒரு பிரச்சனையாக இருக்கிறது. பாதவெடிப்பு ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் இருக்கிறது. பெண்கள் எப்பொழுதும் தண்ணீரில் நின்று வேலை செய்வது தான் இதற்கு காரணமாக இருக்கிறது. இந்த பாத வெடிப்பை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் இருந்து கெமிக்கல் சேர்க்கப்பட்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் நாளடைவில் மேலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதவெடிப்பை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சரி செய்யலாம். அது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

பாதங்களை ஊறவைக்க வேண்டும்:

பாதங்களை ஊறவைக்க

ஓரு பக்கெட்டில் பாதங்களை ஊறவைக்கும் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். அதில் சிறிதளவு உப்பு மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.

பின் அதில் உங்கள் பாதங்களை நனைத்து 20 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும். பின் 20 நிமிடம் கழித்து உங்கள் பாதங்களை சொரசொரப்பான ஸ்க்ரபரை கொண்டு தேய்க்க வேண்டும். பின் உங்கள் பாதங்களை கழுவி, ஒரு துணியால் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து கொள்ள வேண்டும்.

உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகளை 2 நாட்களில் மறைய செய்ய இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

Foot Crack Home Remedies in Tamil:

வேப்ப எண்ணெய்

  1. வேப்ப எண்ணெய் – 1 ஸ்பூன்
  2. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
  3. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

ஒரு கிண்ணத்தில் 1 ஸ்பூன் வேப்ப எண்ணெய், 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து கொள்ளவும். இந்த 3 பொருட்களையும் உங்கள் பாதங்களுக்கு தேவையான அளவில் எடுத்து கொள்ளலாம்.

மஞ்சள் தூள்

பிறகு இந்த 3 பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.  வேப்ப எண்ணெயில் பாதவெடிப்புகளை நீக்கும் பண்புகள் இருக்கின்றன. விளக்கெண்ணெய் பாதங்களில் இருக்கும் இறந்த செல்களை நீக்குகிறது. விளக்கெண்ணெயில் இருக்கும் பண்புகள் பாத வெடிப்புகளை நீக்கி பாதங்களை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மஞ்சள் தூள் கிருமி நாசினியாக பயன்படுகிறது. இது இறந்த செல்களை நீக்கி பாத வெடிப்பு வராமல் பாதுகாக்கிறது.  

ஒரே இரவில் பாதவெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

பாதங்களுக்கு அப்ளை செய்யும் முறை:

நாம் தயார் செய்து வைத்திருக்கும் கிரீமை இரவு தூங்க செல்லும் முன், மேல் கூறியது போல உங்கள் பாதங்களை ஊறவைத்து ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

பின் இந்த கிரீமை உங்கள் பாதங்களில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்ததும் உங்கள் பாதங்களை கழுவி கொள்ளலாம்.

இதுபோல தொடந்து 3 நாட்கள் செய்து வந்தால் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்புகள் மறைய தொடங்கும். 1 முறை ட்ரை செய்து பாருங்கள் நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement