தலைமுடி உதிர்வது நின்று முடி நன்கு வளர இந்த 2 டிப்ஸ் மட்டும் போதும்..!

Advertisement

Hair Fall Control Tips in Tamil

பொதுவாக இன்றைய சூழலில் அனைவருக்கும் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வது மற்றும் உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளராதது தான். அதற்காக நாமும் பல முறைகளை கையாண்டிருப்போம். ஆனால் அவையாவும் அவ்வளவு நல்ல பலனை அளித்திருக்குமா என்றால் உங்களின் பதில் இல்லை என்றே இருக்கும். ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள டிப்ஸ் உங்களுக்கு நல்ல பலனை அளித்து உங்களின் தலைமுடி உதிர்வை நிறுத்தி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்வதற்கு உதவிபுரியும். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்துகொண்டு, அதனை முயற்சித்து பயன்பெறுங்கள்.

Home Remedies for Hair Fall and Regrowth in Tamil:

Hair Growth Tips in Tamil

தலைமுடி உதிர்வை நிறுத்தி, உதிர்ந்த இடத்தில்  புதிய முடி வளரச்செய்வதற்கான டிப்ஸ்களை பார்க்கலாம்.

டிப்ஸ் – 1 

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன் 
  2. ஆலிவ் எண்ணெய் (Olive Oil)- 1 டீஸ்பூன் 
  3. ஆமணக்கு எண்ணெய் (Caster Oil) – 1 டீஸ்பூன் 
  4. அரிசி தண்ணீர் – 2 டேபிள் ஸ்பூன் 
  5. தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்

மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து உங்கள் தலைமுடி முழுவதும் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்து கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து பிறகு தலைக்கு குளியுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> தலைமுடி பிரச்சனை அனைத்திற்கும் இந்த டிப்ஸ் மட்டும் போதும்

இதனை வாரத்திற்கு இருமுறை என்று தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வது நின்று உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.

டிப்ஸ் – 2 

Home Remedies for Hair Fall and Regrowth in Tamil

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 2 டேபிள் ஸ்பூன்
  3. பாதாம் எண்ணெய் (Almound Oil) – 1 டேபிள் ஸ்பூன்
  4. ஆமணக்கு எண்ணெய் (Caster Oil) – 1 டேபிள் ஸ்பூன்

இதையும் படித்துப்பாருங்கள்=> தேங்காயை இப்படிக்கூட பயன்படுத்தலாமா இது தெரியாம போச்சே

மேல் கூறியுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து உங்கள் தலைமுடி முழுவதும்  படும்படி நன்கு தடவிக் கொள்ளுங்கள். 15 – 20 நிமிடம் கழித்து பின்னர் தலைக்கு குளியுங்கள்.

இதனை வாரத்திற்கு ஒரு முறை  என்று தொடர்ந்து செய்து வருவதின் மூலம் உங்களின் தலைமுடி உதிர்வது நின்று உதிர்ந்த இடத்தில்  புதிய முடி வளர்வதை நீங்களே காணலாம்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement