அரை மணி நேரத்தில் வெள்ளை முடி இயற்கையாக கருமையாக மாற்றும் ஹேர் டை..!

Advertisement

தலைமுடி வளர ட்ரிங் செய்முறை மற்றும் நரை முடி கருமையாக பீட்ரூட் ஹேர் டை செய்முறை | Hair Growth and Hair Dye Preparation in Tamil

Hair Dye Preparation in Tamil – சிறு வயதில் நரை முடி வருவதற்கு மிக முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு என்று சொல்லலாம். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் நமது முடி வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் இல்லையென்றால் கண்டிப்பாக. நரை முடி பிரச்சனை, முடி உதிர்வு பிரச்சனை என்று நிறைய வந்துகொண்டே இருக்கும். ஆக இன்று நாம் நரை முடி பிரச்சனை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைக்கு இயற்கையான முறையில் குணப்படுத்த இரண்டு வகையான டிப்ஸை பார்க்கலாம். அதாவது முதல் டிப்ஸ் முடி வளர்ச்சிக்கு உதவும் ஒரு ட்ரிங் செய்முறை, இரண்டாவது டிப்ஸ் நரை முடியை கருமையாக இயற்கை ஹேர் டை தயாரிக்கும் முறையை பற்றி பார்க்கலாம் வாங்க.

முடி வளர்ச்சியை அதிகரிக்க கருவேப்பிலை ஜூஸ் – Curry Leaves Juice for Fast Hair Growth In Tamil:

Curry Leaves Juice for Fast Hair Growth In Tamil

தினமும் காலை எழுந்தவுடன் ஒரு பெரிய நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளுங்கள், பின் அவற்றில் இருக்கும் விதையை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் ஒரு கைப்பிடியளவு கருவேப்பிலை சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக்கொள்ளுங்கள், பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஒரு முறை அரைத்தெடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அதனை வடிகட்டினால் முடி வளர்ச்சிக்கான ட்ரிங் தயார். தினமும் இதனை காலை வெறும் வயற்றி குடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஹர் டையை தூக்கி போடுங்க.! இயற்கையான முறையில் வெள்ளை முடியை கருப்பாக மாற்றலாம் 100% ரிசல்ட்

நரை முடி கருமையாக பீட்ரூட் ஹேர் டை செய்முறை – Beetroot Hair Dye Preparation in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. பீட்ரூட் – ஒன்று
  2. அவுரி பொடி – மூன்று ஸ்பூன்
  3. டீத்தூள் – 2 1/2 ஸ்பூன்

பீட்ரூட் ஹேர் டை செய்முறை – How to Make Beetroot Hair Dye at Home in Tamil:

முதலில் பீட்ரூட்டில் உள்ள தோல் பகுதியை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பேஸ்ட்டு போல் அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அதனை ஒரு பவுளிற்கு மாற்றி கொள்ளவும்.

பின் அடுப்பில் ஒரு பாத்திரம் வரித்து அதில் முக்கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் 2 1/2 ஸ்பூன் டீத்தூள் சேர்த்து 10 நிமிடம் நன்றாக கொதிக்கவிக்க வேண்டும்.

10 நிமிடம் கழித்து அதனை வடிகட்டி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது பீட்ரூட் பேஸ்ட்டை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் மூன்று ஸ்பூன் அவுரி பொடி மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக டீ  டிகாஷனை ஊற்றி பேஸ்ட்டு போடல் கலந்துகொள்ளுங்கள்.

பிறகு 1/2 மணி நேரம் நன்றாக ஊறவைத்து எடுத்தால் ஹேர் டை தயாராகிவிடும்.

இந்த ஹேர் டையை தலையில் அப்ளை செய்து 1/2 மணி நேரம் கழித்து தலை அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதனை தலைக்கு அப்ளை செய்யலாம். முதல் முறை ட்ரை செய்யும்போதே நல்ல மாற்றம் தெரியும். தொடர்ந்து மூன்று வாரம் தலைக்கு பயன்படுத்தி வந்தால் நரை முடி முழுமையாக கருமையாக மாறிவிடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வெள்ளை முடியை கண்டு கவலை வேண்டாம்.. இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள் போதும்..!

குறிப்பு:

இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்தும் போது தலையில் எண்ணெய் தடவி இருக்க கூடாது. தலையில் எண்ணெய் இல்லாமல் தான் இந்த ஹேர் டையை தலைக்கு பயன்படுத்த வேண்டும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil 
Advertisement