முடி உதிர்வை நிறுத்தி, முடி நீளமாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்

Advertisement

முடி உதிர்வதை தடுக்க எண்ணெய்

பொதுவாக பெண்களுக்கு முடி நீளமாக இருக்க வேண்டுமென்று தான் ஆசை இருக்கும். முடி நீளமாக வளருவதற்காக நிறைய கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவார்கள். இப்படி இரசாயனம் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதால் முடி உதிர்வு, பொடுகு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். முடியில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாமல் இயற்கையான முறையில் முடி உதிர்வை நிறுத்தி, முடி நீளமாக வளர எண்ணெய் பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • காய்ந்த நெல்லிக்காய் –50 கிராம்
  • வெட்டி வேர் – 50 கிராம் 
  • செம்பருத்தி பூ –50 கிராம்
  • வேம்பாலபட்டை –50 கிராம் 
  • தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 

இதையும் படியுங்கள் ⇒ 15 நாட்களில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு முடி நீளமாக வளர இந்த ஒரு எண்ணெய் போதும்..!

எண்ணெய் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் தேவையான அளவு ஊற்றி கொள்ளுங்கள்.

பின் வெட்டி வேர், காய்ந்த நெல்லிக்காய், செம்பருத்தி பூ, வேம்பாலபட்டை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த கலந்த கலவையை ஒரு நாள் முழுவதும் அப்படியே வையுங்கள். சும்மா வைப்பதை விட அந்த பாத்திரத்தின் மேல் ஒரு துணியை கட்டி சூரிய ஒளி படும்படி வைத்தால் சிறந்ததாக இருக்கும்.

நாள் முழுவதும் அப்படியே வைத்திருப்பதால் சேர்த்த பொருட்களின் சாறுகள் எண்ணெயில் கலந்திருக்கும்.

இந்த கலவையை மறுநாள்  வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டிய பிறகு சக்கை மேல் பகுதியில் தங்கி கீழ் பகுதியில் எண்ணெய் மட்டும் வந்திருக்கும். இந்த எண்ணெயை பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள். 

அப்ளை செய்யும் முறை:

இந்த எண்ணெயை நீங்கள் தேங்காய் எண்ணெய் எப்படி தினமும் அப்பளை செய்வீர்களா அதே போல் அப்ளை செய்து கொள்ளுங்கள். விரைவில் நீங்கள் ஆச்சிரியப்படும் அளவிற்கு முடி நீளமாக வளரும்.

இதையும் படியுங்கள் ⇒ வாரத்திற்கு 1 முறை இரவு தூங்கும் போது தடவினால் போதும் முடி நீளமாக கருமையாக வளரும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami

 

Advertisement