முடியை வேகமாக வளர வைக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.! ட்ரை பண்ணி பாருங்க

Advertisement

முடி வேகமாக வளர

பொதுவாக பெண்களுக்கு முடி அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அதற்காக கடையில் கெமிக்கல் நிறைந்திருக்கும் ஆயிலை பயன்படுத்துவார்கள். பயன்படுத்தும் போது நல்ல பலனை கொடுத்தாலும் நாளடைவில் முடியிலும், ஆரோக்கியத்திலும் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் இயற்கையான முறையில் முடி வேகமாக வளர எண்ணெய் எப்படி செய்வது என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. கற்றாழை –1
  2. வெந்தயம் – 1 தேக்கரண்டி 
  3. மருதாணி – 1 கைப்பிடி 
  4. கறிவேப்பிலை – 2 கைப்பிடி 
  5. செம்பருத்தி பூ – 20
  6. மிளகு – 10 
  7. நெல்லிக்காய் –
  8. நல்லெண்ணெய் – 1/2 லிட்டர் 
  9. தேங்காய்  எண்ணெய் – 1/2 லிட்டர் 

இதையும் படியுங்கள் ⇒ 15 நாட்களில் அடர்த்தியான நீளமான முடி வளர இந்த 3 பொருள் போதும்

முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி.?

hair growth oil in tamil

ஒரு பாத்திரத்தில் கற்றாழை 1 மடல் நறுக்கி சேர்க்கவும், ஊற வைத்த வெந்தயம், மருதாணி 1 கைப்பிடி, கறிவேப்பிலை 2 கைப்பிடி, செம்பருத்தி பூ 20, மிளகு 10, வெங்காயம் 10, கொட்டை இல்லாமல் நெல்லிக்காய் 3, நல்லெண்ணெய் 1/2 லிட்டர், தேங்காய் எண்ணெய் 1/2 லிட்டர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

hair growth oil in tamil

எண்ணையின் நிறம் வந்திருக்கும் அல்லது அதில் சேர்க்கப்பட்டிருக்க இலைகள் கையில் எடுத்தால் மொறுமொறுன்னு இருக்க வேண்டும். இந்த நிலையில் அடுப்பை அணைத்து விடவும்.

எண்ணெய் சூடு ஆறியதும் வடிகட்டி சக்கை இல்லாமல் எண்ணெயை மட்டும் எடுத்து கொள்ளவும். இந்த எண்ணெய் 6 மாதத்திற்கு கெட்டு போகாமல் இருக்கும்.

அப்ளை செய்யும் முறை:

 முடி வளர எண்ணெய் தயாரிப்பது எப்படி

இந்த எண்ணெயை நீங்கள் தினமும் பயன்படுத்தும் எண்ணெய் போலவே தேய்த்து கொள்ளலாம். இல்லையென்றால் வாரத்தில் ஒரு நாள் தலையில் அப்பளை செய்து 20 நிமிடம் வரைக்கும் ஊறவைத்து பிறகு ஷாம்பை பயன்படுத்தி தேய்த்து குளிக்கலாம். தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள் விரைவில் மாற்றத்தை காண்பீர்கள்.

இதையும் படியுங்கள் ⇒ இளம் வயதிலேயே நரைமுடி வருகிறதா கவலைவேண்டாம் இந்த டிப்ஸ் மட்டும் போதும்..!

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil

 

Advertisement