தலை அரிப்பு நீங்க என்ன செய்வது..! Itching In Hair Home Remedies..!
Hair Itching Remedies Tamil: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம் பதிவில் தலை முடி அரிப்பை போக்க சூப்பர் டிப்ஸ் தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். எப்போதும் தலை முடியில் அரிப்பு போன்ற பிரச்சனை இருப்பது நம் தலை முடியின் ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்க செய்யும். அதோடு தலை முடியின் வேர் பகுதிகளை டேமேஜ் செய்து முடி வளர விடாமலும் செய்கிறது. நம் தலை முடியில் அரிப்பு போன்ற பிரச்சனை எதனால் வருகிறது என்றால் தலை முடியானது எப்போதும் வறண்ட நிலையில் இருப்பதாலும், பொடுகு, பாக்டீரியா போன்ற பல வித நோய்களாலும் நம் தலை முடியானது பல பாதிப்புகளை அடைகிறது. முடி அரிப்பு இருக்கிறது என்றால் அதற்கான தீவிர கவனம் நாம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். ஒவ்வொரு பெண்களுக்கும் தலை முடி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சரி வாங்க தோழிகளே இப்போது இயற்கையான முறையில் தலை முடி அரிப்பை போக்கும் சூப்பர் டிப்ஸை இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
நரை முடி முற்றிலும் மாற..! ஒரு தடவை இதை தேய்த்தால் போதும்..! |
தலையில் அரிப்பு குறைய – தேவையான பொருட்கள்:
- வேப்பிலை – 1 கப்
- எலுமிச்சை சாறு – 4 டீஸ்பூன்
- இஞ்சி – 1 சிறிய துண்டு
- தண்ணீர் – 1/2 கப்
ஸ்டேப் 1:
தலை முடியில் அரிப்பு நீங்குவதற்கு முதலில் 1 கப் அளவிற்கு வேப்பிலையை நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும். 1 கப் அளவான வேப்பிலையை மிக்ஸி ஜாரில் சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 2:
மிக்ஸி ஜாரில் 1 கப் வேப்பிலை சேர்த்த பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு 4 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.
ஸ்டேப் 3:
அடுத்ததாக மிக்ஸி ஜாரில் எலுமிச்சை சாறு சேர்த்த பின்பு இஞ்சியின் சிறு துண்டினை சேர்க்க வேண்டும். இஞ்சியுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
வெந்தயம் ஒன்று போதும் முடி உதிர்வை தடுக்க..! Fenugreek Seeds Benefits For Hair..! |
பயன்படுத்தும் முறை:
ஜாரில் உள்ளவற்றை நன்றாக அரைத்த பிறகு வடிகட்டியால் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு காட்டன் துணியால் நனைத்து தலை முடியின் வேர்களில் படும் அளவிற்கு அப்ளை செய்ய வேண்டும்.
வேர் பகுதிகளில் அப்ளை செய்து 2 மணிநேரம் வரை வைத்திருக்க வேண்டும். 2 மணி நேரம் பின்னர் வாஷ் செய்துக்கொள்ளலாம். தலை முடி அரிப்பு உள்ளவர்கள் இந்த டிப்ஸை வாரத்தில் 1 முறை செய்து வந்தால் போதும். அரிப்பு, பொடுகு தொல்லை முற்றுலும் நீங்கிவிடும்.
குறிப்பு:
வேப்பிலை: வேப்பிலையில் இருக்கக்கூடிய கசப்பு தன்மை தலை முடியில் இருக்கும் அரிப்பு பிரச்சனைக்கு முற்றிலும் தீர்வு கொடுக்கும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறானது தலை பகுதிகளில் இருக்கக்கூடிய பாக்டீரியா, பூஞ்சை போன்ற நோய்களை வேரோடு எடுத்துவிடும். அது மட்டும் இல்லாமல் பேன், பொடுகு, ஈருக்கள் போன்றவற்றிலிருந்தும் விடுவித்து தலை முடியை சுத்தமாக வைத்திருக்கும்.
இஞ்சி: இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்தவை என்று அனைவரும் அறிந்த ஒன்றுதான். தலையில் அழுக்குகள் சேர்வதால் கூட அரிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம். இஞ்சி நம் தலை முடியினை சுத்தமாக வைத்துக்கொள்ளும். பொடுகு, தலை முடி அரிப்பு போன்ற அனைத்து வித முடி பிரச்சனைகளுக்கும் இஞ்சி நல்ல மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கும்.
முடி அடர்த்தியாக வளர வெங்காயம் சாறு..! Onion juice for hair in tamil..! |
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | அழகு குறிப்புகள் |