உடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்..!

Homemade Skin Whitening Soap in Tamil

உடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யலாம் சோப்பு..! Homemade Skin Whitening Soap in Tamil..!

Homemade Skin Whitening Soap in Tamil:- பொதுவாக அனைவருக்குமே சரும அழகை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் சரும அழகை அதிகரிக்க வேண்டும் என்று கடைகளில் விற்கப்படும் அதிக கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். இருப்பினும் அவற்றை எல்லாம் பயன்படுத்தினாலும் எந்த பலனும் கிடைக்காது. சருமத்திற்கு அதிக பக்கவிளைவுகள் தான் ஏற்படும். எனவே இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிப்பதுதான் மிகவும் சிறந்த முறையாகும். எனவே தங்கள் உடல் முழுவதும் வெள்ளையாக வீட்டிலேயே செய்யக்கூடிய இரண்டு குளியல் சோப் தயாரிப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோமா?

இந்த குளியல் சோப்பினை தாங்கள் தயாரித்து பயன்படுத்துவதினால், சரும அழகை இயற்கையான முறையில் அதிகரிக்க முடியும். மேலும் சருமம் ஆரோக்கியமாகவும், இளமையுடனும் காணப்படும். சரி வாங்க முகம் வெள்ளையாக குளியல் சோப் எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

How to Make Homemade Neem Soap in Tamil:-

How to Make Homemade Neem Soap in Tamil

தேவையான பொருட்கள்:-

  1. வேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
  2. துளசி – சிறிதளவு
  3. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  4. எலுமிச்சை தோல் – ஒரு ஸ்பூன்
  5. எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
  6. டீ ட்ரி ஆயில் – 10 -13 துளிகள்
  7. Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base – சிறிதளவு

Homemade Skin Whitening Soap in Tamil – செய்முறை:-

ஒரு மிக்சி ஜரினை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சுத்தம் செய்த வேப்பிலை மற்றும் துளசியை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் பொடிதாக அரைக்க வேண்டும்.

பின் அரைத்த இந்த கலவையை ஒரு சுத்தமான பவுலில் எடுத்து கொள்ளுங்கள். பின் இதனுடன் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், துருவிய எலுமிச்சை தோல் ஒரு ஸ்பூன், எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் மற்றும் 10 – 13 துளிகள் டீ ட்ரி ஆயில் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் மேலே படத்தில் காட்டியுள்ளது போல் அடுப்பில் பாத்திரத்தை வைத்து தண்ணீர் ஊற்றி, மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base-ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த பாத்திரத்தில் சேர்த்து நன்றாக உருக்க வேண்டும். இந்த Ultra Clear Melt And Pour Soap அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் விற்பனை செய்யப்படுகிறது எனவே அங்கு ஆர்டர் செய்து பெற்று கொள்ளலாம்.

Ultra Clear Melt And Pour Soap நன்றாக கரைந்ததும் அரைத்து வைத்துள்ள வேப்பிலை கலவையினை இதனுடன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிடவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மேல் காட்டப்பட்டுள்ளது போல் தங்களிடம் ஏதாவது ட்ரே இருந்தால் அவற்றில் தாங்கள் தயாரித்து வைத்துள்ள சோப் கலவையினை ஊற்றுங்கள். பின் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும்.

பிறகு ட்ரேயில் இருந்து நீம் சோப்பினை தனியாக எடுத்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். இந்த நீம் சோப் முகத்தில் உள்ள பருக்களை நீக்குவதோடு மீண்டும் முகத்தில் பருக்கள் வருவதை அனுமதிக்காது, அதேபோல் பருக்களினால் ஏற்படும் தழும்புகளை மறைய செய்யும். மேலும் சருமத்தை மென்மையாகவும் பொலிவுடனும் வைத்து கொள்ளவும்.

ஒரு இரவு போதும் உங்கள் முகம் வெள்ளையாக டிப்ஸ்

How to Make Sandal Soap at Home in Tamil..!

How to Make Sandal Soap at Home in Tamil

தேவையான பொருட்கள்:-

  1. பாதாம் – ஒரு கைப்பிடியளவு
  2. சந்தனம் – ஒரு ஸ்பூன்
  3. கற்றாழை ஜெல் – ஒரு ஸ்பூன்
  4. டீ ட்ரி ஆயில் – 10 -13 துளிகள்
  5. Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base – சிறிதளவு

Homemade Skin Whitening Soap in Tamil – செய்முறை:-

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சந்தனம் பவுடர் ஒரு ஸ்பூன், கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன், டீ ட்ரி ஆயில் 10 துளிகள் மற்றும் மிக்சியில் அரைத்த பாதாம் பருப்புகள் ஆகியவற்றை சேர்த்து சோப் செய்வதற்கு தயாரா வைத்து கொள்ளுங்கள்.

பின் மேலே படத்தில் காட்டியுள்ளது போல் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சிறிதளவு Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base-ஐ சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த பாத்திரத்தில் சேர்த்து நன்றாக உருக்க வேண்டும்.

பிறகு Roots D Botanica Ultra Clear Melt And Pour Soap Base நன்றாக உருகியதும் கலந்து வைத்துள்ள சந்தன கலவையினை இதனுடன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும்.

பின் அடுப்பில் இருந்து இறக்கி சோப் ட்ரேயில் இந்த திரவத்தை ஊற்றி ஒரு மணி நேரம் காத்திருங்கள். ஒரு மணி நேரம் கழித்து ட்ரேயில் இருந்து சோப்பினை எடுத்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.

இந்த சந்தன சோப் சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ளும், முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கும், சரும வறட்சியை நீக்கி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளும்.

முகப்பருவை நீக்க வேப்பிலை சோப் தயாரிப்பது எப்படி..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil