வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்கள் முகத்தில் இருக்கும் பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தையும் நீக்க இந்த பேஸ் பேக் மட்டும் போதும்..!

Updated On: January 30, 2023 5:47 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

How To Remove Pimples and Dark Spots

இன்றைய நிலையில் அனைவருக்கும் இருக்க கூடிய பிரச்சனை தான் இது. ஆண் மற்றும் பெண் இருவருக்குமே முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் நாம் செய்யும் சில தவறுகளால் முகத்தில் பருக்கள் வந்து அது நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறி முகத்தின் அழகையே கெடுத்து விடுகிறது. மறுபடியும் இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கக் கூடிய கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறீர்கள்.

இதனால் சருமத்தில் மேலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதனால், முகத்தில் இருக்கும் பருக்கள் முதல் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் குழிகள் என்று அனைத்தையும் நீக்குவதற்கு இந்த ஒரு பேஸ் பேக் மட்டும் போதும். வாங்க நண்பர்களே இந்த பேஸ் பேக் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How To Remove Pimples and Dark Spots in Tamil: 

  1. வாழைப்பழத் தோல் – 1
  2.  உருளைக்கிழங்கு – 1
  3.  சோளமாவு – 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்

வாழைப்பழத் தோல் எடுத்து கொள்ளவும்:

வாழைப்பழத் தோல் எடுத்து கொள்ளவும்

இந்த பேஸ் பேக் செய்வதற்கு நாம் வேண்டாம் என்று தூக்கி எரியும் இந்த வாழைப்பழத்தின் தோல் மட்டும் போதும். 1 வாழைப்பழத்தின் தோலை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

 வாழைபழத் தோலில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இருப்பதால் இது சருமத்தில் வறட்சி ஏற்படாமல் பார்த்து கொள்கிறது. சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள் மற்றும் கருவளையம் என்று இவை அனைத்தையும் நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது.  
3 நாட்களில் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

உருளைக்கிழங்கு தோலை நீக்கவும்: 

உருளைக்கிழங்கு தோலை நீக்கவும்

ஒரு உருளைக்கிழங்கு எடுத்து கொள்ளவும். பின் அதன் தோலை நீக்கி விட்டு, உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

 உருளைக்கிழங்கில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. இதில் இருக்கும் சத்துக்கள் சருமத்தில் இருக்கும் கருமையை போக்க உதவுகிறது. இது வறட்சியை போக்கி முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு கரும்புள்ளிகளை மறைய செய்ய உதவுகிறது.  

பேஸ் பேக் தயாரிக்கும் முறை: 

பேஸ் பேக் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும். பின் நாம் நறுக்கி வைத்துள்ள வாழைப்பழம் மற்றும் உருளைக்கிழங்கை அதில் போட்டு 5 நிமிடம் வரை நன்றாக கொதிக்க விடவும்.

பின் அதை ஆறவிட்டு ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் போல அரைத்து கொள்ள வேண்டும்.

நாம் அரைத்த இந்த பேஸ்டை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு சோளமாவு மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் 2 நாட்களில் மறைய இதை தடவுங்கள்..!

அப்ளை செய்யும் முறை:

அப்ளை செய்யும் முறை

இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். இந்த பேக் 20 நிமிடம் வரை அப்படியே இருக்கட்டும். 20 நிமிடம் கழித்து உங்கள் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளவும்.

இதுபோல வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், தழும்புகள், கருவளையம் மற்றும் பருக்கள் இவை அனைத்து மறைந்து விடும். மேலும் முகத்தில் இருக்கும் கருமை நீங்கி முகம் பொலிவுடன் இருக்கும். 

மேல்கூறியது போல இந்த பேக்கை அப்ளை செய்து வாருங்கள் நல்ல ரிசல்ட் உங்களுக்கே தெரியும்..!

இதையும் படியுங்கள் ⇒ முகத்தில் எண்ணெய் பசை நீங்கி, பருக்களை நீக்க இந்த ஒரு பொருள் போதும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Make Aloe Vera Gel at Home in Tamil

வீட்டிலேயே கற்றாழை ஜெல் தயாரிப்பது எப்படி?

வெயில் காலத்தில் வறண்டு காணப்படும் உங்களின் சருமத்தை 1 மணி நேரத்தில் மென்மையாக மாற்ற இதை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்..!

வெயில் கருமை நீங்க

வெயில் காலத்தில் முடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா..! இந்த தேங்காய் எண்ணெய் மட்டும் போதும்..!

Glass Skin Tips in Tamil

கொரியன் பெண்களின் அழகின் இரகசியம் இதுதான்..! | Korean Beauty Tips in Tamil

cucumber beauty tips for glowing skin in tamil

இந்த வெயிலிலும் முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய் மட்டும் போதும்..

summer beauty tips in tamil

வெயில் வந்தாச்சு.. உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ்..!

Split Hair Treatment At Home in Tamil

வெயில் காலத்தில் உங்கள் முடி பாதியில் உடைந்து விழுகிறதா..? அப்படி என்றால் இதை பண்ணுங்க..!

How To Prevent Body Odor in Summer in Tamil

கோடைக்காலத்தில் அதிகமாக வியர்த்து உடலில் துர்நாற்றம் வீசுகிறதா..?அப்போ இதையெல்லாம் Follow பண்ணுங்க..!