இரண்டு நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க உருளைக்கிழங்கு மட்டும் போதும்..

how to remove spots from face in 2 days naturally at homein tamil

How to Remove Spots From Face in 2 Days Naturally at Home

முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளில் பருக்களும் ஒன்று. பருக்கள் வந்த பிறகு அதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று நினைத்து கிரீம்களை அப்ளை செய்வோம். ஆனால் பருக்கள் போன பிறகு அந்த இடத்தில் கரும்புள்ளியாக மாறிவிடும். இவை முகத்தின் அழகை கெடுக்கிறது. அதனால் இந்த கருப்புள்ளிகளை வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இரண்டு நாட்களிலே எப்படி மறைய வைப்பது என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

கரும்புள்ளிகளை மறைக்க:

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பால்:

கரும்புள்ளிகளை மறைக்க

பால் கரும்புள்ளிகளை மறைக்க பெரிதும் உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து கொள்ளவும். பாலை காட்டனில் நனைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்யவும். இதனை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை என்று தொடர்ந்து அப்ளை செய்து வந்தால் விரைவில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பப்பாளி:

கரும்புள்ளிகளை மறைக்க

பப்பாளி வறண்ட சருமத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

ஒரு கிண்ணத்தில் பழுத்த பப்பாளி பழத்தை எடுத்து பிசைந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

முகத்தில் போகவே போகாதுனு இருந்த பருக்கள் உடனே போக இதை ட்ரை பண்ணுங்க…!

மஞ்சள்:

கரும்புள்ளிகளை மறைக்க

 ஒரு பவுலில் 1 தேக்கரண்டி மஞ்ச தூள், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும்.  

உருளைக்கிழங்கு:

கரும்புள்ளிகளை மறைக்க

பச்சை உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கரும்புள்ளிகளை நீக்க உதவுகிறது. 

உருளைக்கிழங்கை சிறியதாக நறுக்கி மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த பிறகு அதிலிருந்து சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். இதனுடன் எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி, தயிர் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவி கொள்ளலாம்.

முகத்தில் பருக்கள் இல்லாமலும், வெண்மையாகவும் இருக்க இந்த 3 பொருள் போதும்..!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil