உடம்பில் இருக்கும் தேவையில்லாத முடிகளை நிரந்தரமாக நீக்க..! Unwanted Hair Removal Home Remedies..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.com பதிவில் இயற்கையான முறையில் பெண்கள் உடலில் வளரும் தேவையில்லாத முடிகளை நீக்க ஒரு ஈஸியான டிப்சை இன்று நாம் பார்க்க போகிறோம். இனி பெண்கள் பார்லர் சென்று பணத்தை செலவழிக்க தேவையில்லை. வீட்டில் இருந்து இயற்கையான முறையில் எப்படி முடிகளை அகற்றலாம் (Unwanted Hair Removal) என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பல பெண்கள் தேவையில்லாத முடிகளை நீக்க பெரிதும் சிரமப்படுகின்றனர், அவர்கள் அதற்கு கீழே கொடுக்க
How to Remove Unwanted Hair Permanently at Home Naturally in Tamil:
டிப்ஸ் 1:
கான் ஃப்ளவர் மாவு & மஞ்சள் தூளை வைத்து தேவையற்ற முடிகளை அகற்றலாம்
தேவையான பொருட்கள்:
- கான் ஃப்ளவர் மாவு – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 பின்ச்
- தண்ணீர் – சிறிதளவு
Step 1:
முதலில் பாத்திரத்தில் 1 ஸ்பூன் அளவிற்கு கான் ஃப்ளவர் மாவு எடுத்துக்கொள்ளவும். பின் 1 பின்ச் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
Step 2:
அதன் பிறகு மஞ்சளுடன் தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாத அளவுக்கு நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அடுப்பை ஆன் செய்து மிதமான சூட்டில் வைத்து பாத்திரத்தில் கலந்து வைத்ததை அடுப்பில் 10 நிமிடம் வைத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்த பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம்.
Step 3:
அடுத்து இதை நன்றாக ஆறவைத்து கொள்ளவும். ஆறவைத்த பிறகு உடம்பில் முடி உள்ள இடத்தில் தடவ வேண்டும்.
இந்த கலவையை நிறைய தடவாமல் முடி உள்ள இடத்தில் கொஞ்சமாக தடவினால் போதும்.
Step 4:
இதை தடவும் முன் உங்கள் உடம்புகளில் அழுக்குகள், எண்ணெய் பசை இல்லாமல் இருக்கவேண்டும். அதுபோல் ஏதேனும் இருந்தால் பவுடர் போட்ட பிறகும் இந்த கலவையை தடவிக்கொள்ளலாம்.
இதை தடவிய உடனே நல்ல மாற்றம் தெரியும். இதை தடவிய பிறகு 20 நிமிடம் நன்றாக காய்ந்த தன்மை வரும் நிலையில் தடவிய இடத்தை உரித்து எடுக்க வேண்டும்.
Step 5:
உரித்து எடுக்கும் போது கொஞ்சம் வலிகள் இருக்கும். இந்த டிப்ஸை உங்கள் முகத்தில், கைகளில், கால்களில் எந்த பகுதிகளில் முடி உள்ளதோ அங்கு தடவ வேண்டும்.
தடவிய இடத்தில், நன்றாக உரித்து எடுத்த பகுதியில் குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம். இந்த டிப்ஸை அடிக்கடி செய்து வந்தால் கை, கால் முடிகள் அனைத்தும் மென்மையாக மாறிவிடும்.
அதிகமாக முடி வளரும் பிரச்சனையும் வராது. கண்டிப்பா இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்க. எல்லாருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த டிப்ஸை மிஸ் பண்ணிடாதீங்க ஃப்ரண்ட்ஸ்.
Face Hair Removal Tips in Tamil |
டிப்ஸ் 2:
தேவையான பொருட்கள்:
- சர்க்கரை – 2 டீஸ்பூன்
- முழு எலுமிச்சை – 1
- மஞ்சள் தூள் – 1 பின்ச் அளவு
- சாம்பல் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 டீஸ்பூன்
கடாயில் முதலில் 2 ஸ்பூன் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். அடுத்து தண்ணீரில் 2 ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கொள்ளவும். தண்ணீரில் சர்க்கரை நன்றாக கரையும் அளவிற்கு கலக்கி விடவேண்டும். நன்றாக சர்க்கரை கரைந்த பிறகு எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும்.
Step 2: மஞ்சள் மற்றும் சாம்பல்
நன்றாக கொதிக்கும் சர்க்கரை நீரில் மஞ்சள் தூள் 1 பின்ச் அளவு சேர்க்க வேண்டும். மஞ்சள் தூள் சேர்த்த பிறகு கொதிக்கும் நீரில் சாம்பலையும் 1 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொள்ளவேண்டும்.
இதை நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக கிளறினால் பொங்கும் தன்மை இருக்காது. இப்பொது அடுப்பை நிறுத்தி கொள்ளலாம்.
Step 3:
அவ்ளோதான் இந்த வாக்ஸ் (Wax) ரெடி. இதுகூட 2 டீஸ்பூன் தேன் சேர்த்தால் இன்னும் பதம் நன்றாக இருக்கும்.
இது நம்ம உடல் எந்த அளவிற்கு வெப்பத்தை தாங்குமோ அந்த அளவிற்கு தான் இதை ஆறவைத்து கொள்ளவும். அதற்கு மேலும் ஆறவைத்தால் முடி வராது.
Step 4:
ரெடி பண்ண வாக்சை (Wax) காலில் ஒவ்வொரு பகுதியாக இதை தடவி கொள்ளவேண்டும். காலில் தடவிய பிறகு கடைகளில் கிடைக்கும் வாக்ஸ் ஸ்ட்ரிப்பை வாங்கி காலில் ஒட்டி ஆப்போசிட் சைடாக இதை இழுக்க வேண்டும்.
இதே போன்று கால்முழுவதும் செய்து முடியை எடுக்க வேண்டும். உங்களுக்கு வாக்ஸ் ஸ்ட்ரிப் கிடைக்கவில்லை என்றால் வீட்டில் இருக்கும் காடான் துணியை (Cotton Cloth) கூட பயன்படுத்தி கொள்ளலாம்.
இனி பெண்கள் யாரும் தேவையில்லாத முடியை நீக்க பார்லர் போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் இருந்தே இதை தாராளமாய் செய்யலாம்.
இந்த டிப்ஸை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க. பெண்கள் அனைவருக்கும் இது ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty tips in tamil |