கேரளா பெண்களின் அழகு ரகசியம் இது தான்..! Kerala Beauty Tips in Tamil..!

kerala beauty tips in tamil

கேரள பெண்களின் அழகு குறிப்பு..!

kerala beauty tips in tamil / கேரள பெண்களின் அழகு குறிப்பு:- கேரளத்து பெண்கள் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர்களின் நீளமான கருமையான கூந்தலும், மீன் போன்ற அழகான கண்களும், மென்மையான மற்றும் பொலிவான சருமமும் தான். மேலும் அவர்களின் கன்னங்கள் நன்கு கொழுகொழுவென்று இருக்கும் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இவர்கள் எக்காரணம் கொண்டும் முகத்திற்கு கண்ட கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவது இல்லை. சரும அழகை பராமரிக்க எப்பொழுதும் இயற்கைப் பொருட்களையே பயன்படுத்துவார்கள்.

கேரளத்து பெண்களின் சருமம் பட்டுப்போன்று மென்மையாக இருப்பதற்கு, இன்னொரு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்கள் சருமத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று காணப்படுகிறது. சரி, அவர்கள் அப்படி என்ன அழகு பராமரிப்புக்களை மேற்கொள்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

கேரள அழகு குறிப்புகள் / kerala beauty tips in tamil..!

நீளமான கருமையான கூந்தலுக்கான ரகசியம்:-

கேரளத்துப் பெண்களின் நீளமான கூந்தலுக்கான ரகசியம் என்னவென்றால் அவர்கள் தினமும் தங்கள் தலைக்கு கலப்படம் இல்லாத சுத்தமான தேங்காய் எண்ணெய் மட்டுமே பயன்படுத்துவார்கள். மேலும் இவர்கள் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு பயன்படுத்தாமல் வெறும் தலை குளிப்பார்கள்.

மென்மையான சருமத்திற்கான ரகசியம் / kerala beauty tips for face in tamil:-

கஸ்தூரி மஞ்சள்:-

turmeric face mask

இவர்கள் முகத்திற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட கிரீமை எப்பொழுதும் சருமத்திற்கு பயன்படுத்துவது இல்லை. அதற்கு பதில் சருமத்திற்கு எப்பொழுதும் கஸ்தூரி மஞ்சளை மட்டுமே பயன்படுத்துவார்கள். இதுவே அவர்களின் சரும அழகிற்கான ரகசியங்களில் ஒன்றாகும்.

கற்றாழை:-

Aloes

அதேபோல் தினமும் சருமத்திற்கு கற்றாழை ஜெல்லினை பயன்படுத்துவார்கள். அதாவது முகத்தில் கற்றாழை ஜெல்லினை நன்றாக அப்ளை செய்து நன்றாக மசாஜ் செய்வார்கள். பின் 10 நிமிடம் காத்திருந்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவுவார்கள். இந்த முறையை தொடர்ந்து பின்பற்றுவார்கள். இவ்வாறு தொடர்ந்து செய்வதினால் சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்படுகிறது இதனால் சருமம் என்றும் மென்மையாகவும் இளமையாகவும் காணப்படுகிறது. குறிப்பாக இந்த முறையை அவர்கள் பின்பற்றும்பொழுது அவர்கள் முகத்திற்கு சோப்பு பயன்படுத்துவது இல்லை.

கடலை மாவு:-

இந்த கடலை மாவு கேரளத்து பெண்களின் அழகு சாதன பொருளாக விளங்குகிறது. சமையலில் எப்பொழுதும் பயன்படுத்தும் கடலை மாவினை தினமும் சருமத்திற்கு பேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். அதாவது இந்த கடலை மாவுடன் தயிர், பால், ரோஸ் வாட்டர் இது போன்று ஏதாவது பொருட்களை சேர்த்து முகத்திற்கு பேஸ் பேக்காக பயன்படுத்துவார்கள். இவ்வாறு முகத்திற்கு கடலை மாவினை பேக்காக பயன்படுத்துவதினால் சருமம் சாப்டாக இருக்கும், மேலும் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருத்திட்டுகள் அனைத்தும் அகன்று சருமம் பளிச்சென்று காணப்படும்.

சந்தனம்:-

Sandal

பொதுவாக அனைவரும் அழகு சாதன பொருட்களில் முல்தானி மெட்டியை பயன்படுத்துவோம். இதுவும் பெரும்பாலான கேரளத்து மக்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருள் தான்.  இந்த முல்தானி மெட்டியை சந்தனத்துடன் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்துவார்களாம். இவை முகப்பருக்கள், கரும்புள்ளிகள், நச்சு பொருட்கள் போன்றவற்றை அகற்றி சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், முகம் பொலிவாகவும் வைக்கும்.

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil