ரெண்டே நாளில் சருமத்தை கலராக்கும் மைசூர் பருப்பு.. எப்படி அப்ளை பண்ணணும் பார்க்கலாம் வாங்க..

Advertisement

Maisoor Paruppu Beauty Tips in Tamil – மைசூர் பருப்பு அழகு குறிப்பு

ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கி நாம ஒரு அருமையான பியூட்டி டிப்ஸ் பற்றி தான் தெரிஞ்சிக்க பெற்றோம். அதாவது நம்ம வீட்டுல நிறைய வகையான பருப்பு வகைகள் இருக்கும் இல்லையா.. அந்த பருப்பு வகையில் ஒன்றானது தான் மைசூர் பருப்பு. இந்த மைசூர் பருப்பை பயன் படுத்தி தான் நாம ஒரு பியூட்டி டிப்ஸை பாலோ பண்ண போறோம். சரி வாங்க இந்த மைசூர் பருப்பை பயன்படுத்தி ஒரு அருமையான அழகு குரூப்பை இப்பொழுது நாம் படித்தறியலாம்.

மைசூர் பருப்பு:

இந்த மைசூர் பருப்பு பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறத்தில் மிகவும் அழகாக இருக்கும். வீட்டில் உள்ள பெண்மணிகள் இந்த பருப்பை பயன்படுத்தி சாம்பார் வைப்பார்கள். இந்த பருப்பில் புரதம், பலவகை வைட்டமின் மற்றும் மினரல்கள் ஆகியவற்றை ஊட்டச்சத்து நிறைந்த பருப்பாகும். குறிப்பாக சரும நிறமிழப்பு, பரு, சுருக்கம், கருவளையம் என்று பல்வேறு வகையான சரும பிரச்சனைக்கும் இந்த மைசூர் பருப்பு சிறந்த ஒரு தீர்வைத் தருகிறது.

மைசூர் பருப்பு அழகு குறிப்பு:

பொதுவாக அனைத்து வகை அழகு குறிப்பில் பயன்படுத்தும் முறைதான் ஸ்க்ரப். முகம் அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க விரும்பினால் அடிக்கடி முகத்தை துடைத்து சுத்தமாக வைப்பது நல்லது. சருமத்தை சுத்தம் செய்ய அவசியம் ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். சருமத்துக்கு ஸ்க்ரப் செய்வதால் சருமத்தின் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்கிறது. இது சரும பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. ஆகவே இந்த மைசூர் பருப்பை பயன்படுத்தி முகத்திற்கு எப்படி ஸ்க்ரப் செய்யலாம் வாங்க.

மைசூர் பருப்பு மற்றும் பால்:

இரவு படுக்க செல்வதற்கு முன் சிறிதளவு மைசூர் பருப்பை எடுத்து ஊறவைக்கவும். பின் மறுநாள் காலை ஊறிய பருப்பை எடுத்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். இந்த விழுதுடன் ஒரு ஸ்பூன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த விழுதை உங்கள் சருமத்தில் தடவி ஸ்க்ரப் செய்யுங்கள்.. இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை பொலிவாக்கி புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை இந்த டிப்ஸை பாலோ செய்தல் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மைசூர் பருப்பு அழகு குறிப்பு:

மேல் கூறியுள்ளது போல தான் இரவு படுக்க செல்வதற்கு முன் சிறிதளவு மைசூர் பருப்பை எடுத்து ஊறவைக்கவும். பின் மறுநாள் காலை ஊறிய பருப்பை எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் ஒரு சிறிய அளவிலான தக்காளி மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து மிக்ஷியல் மைபோல் அரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் பேக் தயார் முகத்தில் நன்றாக அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்த பிறகு 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை இந்த டிப்ஸை பாலோ செய்தல் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

மின்னல் போன்ற பளீச் சருமம் பெற உதவும் Night Face Packs உங்களுக்காக

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement