ஒரே வாரத்தில் முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இதை ட்ரை செய்யுங்கள்…!

Advertisement

முடி உதிர்வதை தடுக்க அடர்த்தியாக முடி வளர

பொதுநலம். காமில் அழகு குறிப்பு பதிவை படிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் பெரும்பாலும் அதிக பிரச்சனையாக இருக்க கூடிய முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர என்ன செய்ய வேண்டும் என்பது  பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். எவ்வளவு தான் ட்ரை செய்தாலும் இந்த பிரச்சனை தீரவில்லை என்று நினைக்கும் அனைவருக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரே வாரத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முடி உதிர்வை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் தெரிந்துகொள்ளலாம் வாங்க.!

இதையும் படியுங்கள்⇒ தலையில் எப்போதும் நரை முடி வராமல் முடி கருகருவென்று இருக்க இதை பாருங்கள்..!

முடி உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்?

முடி உதிர்வை நிறுத்தி முடி அடர்த்தியாக வளர நீங்கள் முதலில் ஹேர் ஆயில் தயார் செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:

  • பெரிய வெங்காயம்- 3
  • முட்டை- 1
  • வைட்டமின் E கேப்சூல் (மாத்திரை)- 1

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள வெங்காத்தை தோல் நீக்கி அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். இப்போது நறுக்கிய வெங்காயத்தை 1 ஸ்பூன் தண்ணீர் ஊற்றி மிக்சி ஜாரில் போட்டு அரைத்து சாறு பிழிந்து வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து கொண்டு அதில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மாற்று வெங்காய சாறு இரண்டையும் ஊற்றி கலந்து தண்ணீர் கொதிக்கும் பாத்திரத்தின் மீது இந்த கிண்ணத்தை வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்ததாக நீங்கள் கிண்ணத்தில் வைத்த எண்ணெய் மிதமான சூட்டிற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெயை கீழே வைத்து லேசாக ஆற விடுங்கள்.

ஸ்டேப்- 5

எண்ணெய் லேசாக ஆறிய பிறகு 1 முட்டையை எடுத்துக்கொண்டு அதில் இருக்கும் வெள்ளை கருவை மட்டும் அதில் ஊற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு வைட்டமின் E கேப்சூல் மாத்திரை 1 எடுத்துக்கொண்டு அந்த மாத்திரையில் உள்ளே இருக்கும் மருந்தை மட்டும் அதில் போட்டு இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

கடைசியாக உங்களுடைய முடியில் வழக்கம் போல் தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் தயார் செய்து Hair Oil-லை உங்களுடைய தலையில் மசாஜ் செய்வது போல அப்ளை செய்து 20 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 7

20 நிமிடம் களித்து தலை குளித்து விடுங்கள். இது மாதிரி வாரம் 1 முறை நீங்கள் செய்து வந்தால் முடி உதிர்வு இல்லாமல் முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே உணர்வீர்கள்.

இதையும் படியுங்கள்⇒ அரிசி கழுவிய தண்ணீரை இப்படி ஒரு முறை பயன்படுத்தினால் நீங்களே ஆச்சரியபடும் அளவிற்கு முடி வளரும் 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement