முகத்தை வெள்ளையாக்க உங்கள் வீட்டில் டீ போடும் சர்க்கரை போதும்..!

Advertisement

இயற்கையாக முகம் வெள்ளையாக

வணக்கம் நண்பர்களே..! இன்றைய அழகுகுறிப்பு பதிவில் உங்களுடைய முகம் இயற்கையாகவே வெள்ளையாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கப்போகிறோம். தினமும் டீ போடும் வெள்ளை சர்க்கரை மட்டும் இருந்தால் போதும். இனி நீங்கள் பார்லருக்கு செல்லாமல் 1 ரூபாய் கூட செலவு செய்யாமல் வீட்டில் இருந்தபடியே முகத்தை பளபளக்க செய்ய வைக்கலாம். அது எப்படி என்று யோசிக்கிறீர்களா. இந்த பதிவை தொடர்ந்து படித்து நீங்களும் பயன்பெறலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்கூந்தல் மற்றும் சரும அழகை பாதுகாக்கும் ஒரே                                                                 எண்ணெய் உங்களுக்கு தெரியுமா..!

முகத்தில் சர்க்கரை பயன்படுத்தும் முறை:

ஸ்டேப்- 1

உங்கள் முகம் வீட்டில் இருந்த படியே அழகு பெற சர்க்கரையை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம். முதலில் நீங்கள் முகத்திற்கு எப்போதும் பயன்படுத்தும் face wash அல்லது cream எடுத்துக்கொண்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி அதன் பிறகு முகத்தை தேய்த்து கழுவி விடுங்கள். இப்படி செய்தால்  முகத்தில் உள்ள அழுக்கை சர்க்கரை நீக்கிவிடும்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக முகத்தை தேய்த்து நன்றாக கழுவி விடுங்கள். அதன் பிறகு 1 ஸ்பூன் சர்க்கரையை எடுத்துக்கொண்டு அதை முகத்தில் பொறுமையாக மசாஜ் செய்வது போல தடவ வேண்டும். முகத்தில் மசாஜ் செய்யும்போது கவனமாக தேய்க்க வேண்டும். 5 நிமிடம் இப்படியே முகத்தை தேய்த்து கடைசியாக முகத்தை கழுவி விடுங்கள்.

இதனை செய்வதினால் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் மென்மையாக மாறிவிடும்.

ஸ்டேப்- 3

கடைசியாக உங்களுடைய முகத்தை வெள்ளையாக்க face பேக் தயார் செய்வதற்கு  தேவையான பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • சர்க்கரை– 1 ஸ்பூன் 
  • எலுமிச்சை சாறு– 1ஸ்பூன் 
  • தேன்– 1 ஸ்பூன் 

சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு இந்த மூன்று பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த face பேக்கை போடுவதற்கு முன் முகத்தை நன்றாக துடைத்து விட்டு அதன் பிறகு முகத்தில் தடவ வேண்டும். 1/2 மணி நேரம் முகத்தில் அப்படியே வைத்து இருந்து அதன் பிறகு முகத்தை கழுவி விடுங்கள். உங்கள் முகம் வெள்ளையாக மாறியதை நீங்களே உணர்வீர்கள்.

கைகளில் கொள்ளாத அளவுக்கு முடி வளர்ச்சி அதிகமாக..! குப்பையில் எரியும்                                                   பொருள் போதும்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tami
Advertisement