நரை முடி மறைய ஹேர் டை தயாரிப்பு | Natural Hair Dye at Home in Tamil
Natural Hair Dye at Home in Tamil – இப்பொழுது எல்லாம் சிறிய வயதில் உள்ளவர்களுக்கு கூட நரை முடி வந்துவிடுகிறது. ஆக இந்த நரை முடியை மறைக்க கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படுத்துகின்றன. கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் நிறைந்த ஹேர் டையை தலைமுடிக்கு பயன்படுத்தினால். தலை முடிக்கு பலவகையான பிரச்சனைகளையும், பக்க விளைவுகளையும் கொடுக்கும். ஆக இந்த பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்கு ஒரு அருமையான இயறக்கை வழி இருக்கிறது. அதாவது இயற்கையான முறையில் ஹேர் டை தயார் செய்து தலை முடிக்கு பயன்படுத்துவது. இதன் மூலம் தலை முடிக்கு எந்த ஒரு வகையிலும் பிரச்சனை ஏற்படாது. சரி வாங்க அந்த ஹேர் டை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.
ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:
- கருவேப்பிலை – ஒரு கையளவு
- பெரிய வெங்காயம் – ஒன்று
- மருதாணி இல்லை – ஒரு கையளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- செம்பருத்தி பூ – 20
- நீலநிறத்தில் உள்ள சங்கு பூ – 20
- காபி பவுடர் – ஒரு ஸ்பூன்
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
3 பொருள் போதும் 7 நாளில் வெள்ளை முடியை முழுமையாக மாற்றிடலாம்..! கருவேப்பிலை ஹேர் டை..!
ஹேர் டை செய்முறை – Natural Hair Dye at Home in Tamil:
முதலி ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் கருவேப்பிலை, வெங்காயம், மருதாணி மற்றும் ஒருகப் தண்ணீர் ஊற்றி நன்கு நைசாக அரைத்து கொள்ளுங்கள்.
இவ்வாறு அரைத்த கலவையை நன்கு வடிகட்டி ஜாரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அடுப்பில் இரும்பு கடாய் வைத்து அவற்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் காபி தூள், காய்ந்த செம்பருத்தி மற்றும் சங்கு பூவை சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள். தண்ணீரின் நிறம் கருப்பாக மாறும் வரை நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள்.
பின்பு காய்ச்சி தண்ணீரை நன்கு ஆறவைத்து வடிகட்டி கொள்ளுங்கள். வேண்டுமென்றால் அந்த பூக்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை அரைத்து மீண்டும் அவற்றில் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
இந்த பூக்களின் சாறையும், முன்பு தயார் செய்துவைத்த கருவேப்பிலை மருதாணியின் சாறையும் ஒன்றாக சேர்த்து கலந்துவிடுங்கள்.
பின் மீண்டும் ஒரு முறை வடிகட்டி கொள்ளுங்கள் அவற்றில் உள்ள துகள்கள் எல்லாம் வெளியே வந்துவிடும்.
இப்பொழுது அடுப்பில் அதே இரும்பு கடாய் வைத்து அவற்றில் வடிகட்டி வைத்துள்ள கலவை சேர்த்து நன்றாக காய்ச்சவும். கலவையானது நன்கு சுண்டு ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும் வரை காய்ச்ச வேண்டும்.
பேஸ்ட் பதத்திற்கு வந்தும் அடுப்பை அணைத்து ஒருநாள் முழுவது அந்த இரும்பு கடாயிலேயே இந்த பேஸ்ட் இருக்கட்டும்.
மறு நாள் அந்த கலவையை ஒரு பவுளிற்கு மாற்றி கொள்ளுங்கள். கடையில் ஒட்டிக்கொண்டு இருந்தால் சிறிதளவு தண்ணீர் ஊற்றி வழித்து எடுத்துக்கொள்ளுங்கள். அவ்வளவு தான் ஹேர் டை தயார்.
பயன்படுத்தும் முறை:
தலை குளித்துவிட்டு தலை முடியை நன்கு காயவைத்துவிடுங்கள். பிறகு இந்த பேஸ்ட்டாய் நன்கு ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள், பின் அதனுடன் மூன்று ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
பின் நரைமுடி உள்ள இடத்தில் நன்றாக அப்ளை செய்து காயவிடுங்கள். பின் தலை சீவிக்கொள்ளலாம். மறுநாள் தலைக்கு ஷாம்பு போடாமல் தலை அலசினால் தலை முடி கருமையாக மாறிவிடும்.
இந்த முறையை ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |