நரை முடியை கருப்பாக மாற்ற இந்த ஹர் டையை பயன்படுத்துங்கள்

natural hair dye homemade in tamil

நரை முடி கருப்பாக வேண்டுமா

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நரை முடி பெரிய பிரச்சனையாக இருக்கிறது. நரை முடியை போக்குவதற்கு கடைகளில் விற்கப்படும் ஹேர் டையை பயன்படுத்துகிறார்கள். கடைகளில் விற்கப்படும் ஹேர் டையில் கெமிக்கல் கலக்கப்பட்டிற்கும். இதை தலை முடிக்கு பயன்படுத்தும் போது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எந்த பிரச்சனையும் இல்லாமல் வீட்டிலே இயற்கை முறையில் ஹேர் டை தயாரிக்கலாம். இயற்கை முறையில் ஹேர் டை பயன்படுத்தும் போது எந்த வித பிரச்சனைகளும் ஏற்படாது. அது என்ன ஹேர் டை என்று இந்த பதிவில் பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

=7 நாட்கள் மட்டும் இதை பயன்படுத்தினால் நரை முடி கருப்பாக மாறிவிடும்

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள்:

  1. மருதாணி இலை – 2 கைப்பிடி 
  2. கிராம்பு –
  3. நொச்சி இலை –1 கப் 
  4. கங்கா துளசி – 1 கப் 
  5. செம்பருத்தி பூ-10 
  6. சங்கு பூ –30
  7. கறிவேப்பிலை – 1 கப் 

ஹர் டை செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் கடினமான கடாய் எடுத்து கொள்ளுங்கள். அதில் 5 கிராம்பு சேர்த்து வறுத்து  கொள்ளவும். கொட்ட பாக்கு 3 எடுத்து கொள்ளுங்கள். அதனோடு மருதாணி இலையையும் எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:2

பிறகு வறுத்து வைத்த கிராம்பை அரைத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள். பிறகு 3 கொட்ட பாக்குகளையும் அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:3

ஒரு மிக்சியில் மருதாணி இலை, அரைத்து வைத்த கிராம்பு மற்றும் கொட்ட பாக்கையும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அரைத்து வைத்த மருதாணி பொடியை சலித்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:4

அடுத்து காய வைத்த கங்கா துளசி, நொச்சி இலை, கறிவேப்பிலை மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் பொடியாக அரைத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்:5

அடுத்து ஒரு கடாய் எடுத்து கொள்ளுங்கள். அதில் செம்பருத்தி பூ 10, 30 சங்கு பூ போன்றவை சேர்த்து கொள்ளுங்கள். அதனோடு பொடி செய்து வைத்திருக்கின்ற கறிவேப்பிலை பொடி 1 1/ 2 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். அதோடு காபி தூள் 1 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். சேர்த்த பொருட்கள் மூழ்கிற அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். பிறகு ஊற்றிய தண்ணீர் பாதி அளவிற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

ஸ்டேப்:6

பின் கொதிக்க வைத்த தண்ணீரை பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பின் அரைத்த விழுதை வடிக்கட்டி தண்ணீரை மட்டும் எடுத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து வடிக்கட்டிய தண்ணீரை சேர்த்து லேசாக சூடுபடுத்தி அடுப்பை அணைத்து விடவும்.

ஸ்டேப்:7

பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள் அதில் மருதாணி பொடியை 4 தேக்கரண்டி சேர்த்து கொள்ளுங்கள். அதில் கொதிக்க வைத்திருக்கின்ற தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விடவும்.

இதையும் படியுங்கள் ⇒ நரை முடி மறைய இந்த ஹேர் டையை பயன்படுத்துங்கள்.. 100% நரை முடி கருமையாக மாறிடும்..!

பயன்படுத்தும் முறை:

நாம் செய்து வைத்துள்ள ஹேர் டையை தலையில் நன்றாக அப்பளை செய்யவும். தலையில் தேய்த்து ஒரு 1 மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். முக்கியமானது  எந்த வித ஷாம்பும் தலையில் பயன்படுத்தாமல் வெறும் தண்ணீரில் தான் தலையை அலச வேண்டும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil