உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்துவதற்கு இந்த 2 பொருள் மட்டும் போதும்..!

Advertisement

Natural Hair Growth Tips

பெண்கள் அனைவருக்குமே முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். முடி நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் இருக்கின்ற முடியும் கொட்ட ஆரம்பித்து விடுகிறது. அதனால் கடைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட்டுவிட்டு ஆரோக்கியமான முறையில் எண்ணெய் தயார் செய்து பயன்படுத்தலாம். அந்த வகையில் வீட்டிலேயே இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தக் கூடிய எண்ணெய் தயார் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் பொருட்கள்: 

வெந்தயம்

  1. வெந்தயம் – 2 ஸ்பூன்
  2. கற்றாழை ஜெல் – 1 ஸ்பூன்
  3. ஆமணக்கு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
1 மாதம் தொடர்ந்து செய்தால் தரையை தொடும் அளவிற்கு முடி வளர்ச்சி அதிகரிக்கும்..!

எண்ணெய் தயாரிக்கும் முறை: 

எண்ணெய் தயாரிக்கும் முறை

நீங்கள் தலைக்கு குளிக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் முடிக்கு தேவையான அளவு வெந்தயத்தை எடுத்து தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

2 நாட்கள் கழித்து அந்த வெந்தயம் ஊறவைத்த நீரை நன்றாக கலந்து விட வேண்டும். பின் அந்த வெந்தய தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

பிறகு அதில் 1 ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்க்க வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் அளவில் ஆமணக்கு எண்ணெயும், 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணெயும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பின் இந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ளுங்கள்.

15 நாட்களில் கொட்டிய இடத்தில் புதிய முடி வளர இந்த எண்ணெய் மட்டும் தடவுங்க..!

அப்ளை செய்யும் முறை: 

அப்ளை செய்யும் முறை

இந்த எண்ணெயை தலை முடி முதல் முடியின் வேர்க்கால்கள் வரை படும்படி 5 நிமிடத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். மறுமுறை15 நிமிடம் அப்படியே தலைமுடியில் ஊறவைக்கவும். பின்பு தலை முடியை நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பு போட்டு குளிக்கலாம்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை என்று 1 மாதம் வரை செய்து வந்தால் முடி நீளமாகவும் அடர்த்தியாகவும், கருப்பாக வளரும்.

வெந்தயத்தில் இருக்கும் சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி பொடுகு பிரச்சனை வராமல் தடுக்கிறது. கற்றாழை முடி அடர்த்தியாகவும் வழவழப்பாகவும் வளர்வதற்கு உதவுகிறது.

மேல் கூறப்படுள்ளது போல இந்த எண்ணெயை அப்ளை செய்து வந்தால் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். முடி அடர்த்தியாக வளர்வதை நீங்களே காண்பீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வாரம் 2 முறை இதை அப்ளை செய்தால் போதும் முடி கருமையாகவே இருக்கும்..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement