முதல் நாள் பார்த்ததை விட 30-வது நாளில் இவ்வளவு முடியா வளர்ந்து இருக்குனு அதை பார்த்து ஆச்சரியபட னுமா..! அப்போ இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Naturally Hair Growth Faster

முடி என்றாலே பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கும். அதற்காகவே நிறைய முக்கியத்துவம் கொடுத்து முடியினை பராமரித்து வருவார்கள் என்று சொல்லலாம். ஆனால் இன்றைய காலத்தை பொறுத்தவரை நம்மில் பாதி பேருக்கு முடியினை சரியாக பராமரிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் போகி விடுகிறது. அதனால் முடியினை அப்படியே விட்டு விடுகிறார்கள். இப்படி விட்டு விடுவதனால் முன்பு இருக்கும் முடியின் அளவை விட இப்போது மிகவும் குறைவாக காணப்படுகிறது. அதனால் தான் இன்றைய பதிவில் முடியின் வளர்ச்சியை அதிகரிக்க இயற்கையாகவே என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த ஹேர் பேக் ஆனது 1-வது நாள் உங்களுடைய முடி எப்படி இருக்கிறதோ அதனை போல இல்லாமல் 30-வது நாளில் முடியில் நல்ல மாற்றம் காணப்படும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

முடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்: 

முடி வேகமாக வளர என்ன செய்ய வேண்டும்

முடி வேகமாக வளர இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய கருவேப்பிலையை வைத்து ஹேர் பேக் செய்து அப்ளை செய்தால் போதுமானது.

 அத்தகைய கறிவேப்பிலையில் கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், புரதம், கொழுப்பு, இரும்பு, தாமிரம் மற்றும் கார்போஹட்ரேட் என பல சத்துக்கள் உள்ளது.  

தேவையான பொருட்கள்:

  1. கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
  2. தேங்காய் துருவல்- 1 கப்
  3. உளுந்து- 1 கப்

இதையும் படியுங்கள்⇒ வெறும் 5 நிமிடத்தில் நரை முடி கருப்பாக மாறிவிடும்..இந்த ஒரு பொருளை பயன்படுத்தினால்..

முடி வளர என்ன செய்வது:

ஸ்டேப்- 1

நீங்கள் முதல் நாள் இரவு 1 கப் வெள்ளை உளுந்து எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு மறுநாள் காலையில் 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலை எடுத்துக்கொண்டு அதனை சுத்தமாக தண்ணீரில் அலசி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு மிக்சி ஜாரில் அலசி வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் துருவி வைத்துள்ள தேங்காய் இரண்டினையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அடுத்து அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை பேஸ்டை ஒரு காட்டன் துணி வைத்து சாறு பிழிந்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

கடைசியாக மிக்சி ஜாரில் ஊற வைத்துள்ள உளுந்தினை சேர்த்து அதனுட சாறு பிழிந்து கறிவேப்பிலை சாறினையும் சேர்த்து மீண்டும் நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய முடிக்கு தேவையான ஹேர் பாக் தயார்.

இதையும் படியுங்கள்⇒ 7 நாட்களில் 3 அடி வரை முடி வளர தேங்காய் ஒன்று போதும்..! ஆச்சரியமாக இருக்கா.. 

முடிக்கு ஹேர் பேக் பயன்படுத்தும் முறை:

அப்ளை செய்யும் முறை

நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹேர் பேக்கை முடியின் அனைத்து பகுதிகளிலும் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு 20 நிமிடம் கழித்து வழக்கம் போல் தலை குளித்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் வாரம் 2 முறை என்று அப்ளை செய்வதன் மூலம் முடி மிகவும் வேகமாக வளர்ந்து விடும்.

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement