வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கற்பூரவள்ளி இலையை இதற்கெல்லாம் கூட பயன்படுத்தலாமா..? இத்தனை நாட்களா இது தெரியாம போச்சே..!

Updated On: October 5, 2023 1:21 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Omavalli Leaf Face Pack in Tamil

பொதுவாக நாம் ஓமவள்ளி அல்லது கற்பூரவள்ளி இலையை சளி பிரச்சனைகளுக்கு மருந்தாக தான் பயன்படுத்தி இருக்கின்றோம். ஆனால் இந்த ஓமவள்ளி இலை உங்களின் முகம் பொலிவு பெறுவதற்கும் உதவி புரியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா..! ஆம் நண்பர்களே இந்த ஓமவள்ளி இலையை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற செய்ய முடியும். அது எப்படி என்பதை பற்றியும் அதன் வழிமுறை பற்றியும் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வழிமுறையில் கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Instant Glow Face Pack Homemade in Tamil:

Instant Glow Face Pack Homemade in Tamil

உங்களின் முகத்தை நன்கு பொலிவு பெற உதவும் சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம். அதற்கு முதலில் தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கற்பூரவள்ளி இலை – 20
  2. கடலை மாவு – 2 டீஸ்பூன்
  3. தயிர் – 2 டீஸ்பூன்
  4. ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்
  5. கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  7. தண்ணீர் – தேவையான அளவு 

ஓமவள்ளி இலையை எடுத்து கொள்ளுங்கள்:

Instant glowing skin face pack in tamil

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 20 கற்பூரவள்ளி இலைகளையும் நன்கு சுத்தம் செய்து விட்டு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதிலிருந்து சாற்றினை மட்டும் வடிகட்டி கொள்ளுங்கள்.

கடலை மாவினை சேர்த்து கொள்ளவும்:

இப்பொழுது நாம் வடிகட்டி வைத்துள்ள கற்பூரவள்ளி இலை சாற்றுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கடலை மாவினை சேர்த்து நன்கு கலந்து  கொள்ளுங்கள்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உங்களின் முகம் 24 மணிநேரமும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? அப்போ இந்த ஒரு பொருளை இப்படி பயன்படுத்துங்கள் போதும்..!

தயிரினை சேர்த்து  கொள்ளவும்:

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் தயிரினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ரோஸ் வாட்டரை சேர்த்து கொள்ளவும்: 

அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டரை சேர்த்து நன்கு கலந்து  கொள்ளுங்கள்.

கற்றாழை ஜெல்லினை சேர்த்து கொள்ளவும்:

பிறகு அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல்லினையும் சேர்த்து நன்கு கலந்து  கொள்ளுங்கள்.

மஞ்சள் தூளினை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டீஸ்பூன் மஞ்சள் தூளினையும் சேர்த்து நன்கு கலந்து உங்களின் முகத்தில் தடவி 10 – 15 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி உங்களின் முகத்தை நன்கு கழுவி கொள்ளுங்கள்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை என தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் முகத்தில் உள்ள கருமை அனைத்தும் நீங்கி நன்கு பொலிவு பெறுவதை நீங்களே காணலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஓமவள்ளி இலை 1 போதும் உங்கள் நரை முடியை கருமையாக்கும் .!

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now