Orange Peel Face Pack Homemade in Tamil
பெண்கள் அனைவருமே தங்கள் முகத்தை அழகாக வைத்து கொள்வதற்கு பல வகையானவற்றை பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் நீண்ட காலத்திற்கு நீடிப்பதில்லை. உங்கள் முகம் நிரந்தரமாக வெண்மையாக ஜொலிக்க ஒரு பொருள் ஒன்று உள்ளது. அது என்னெவென்றால் நாம் சாப்பிட்டு விட்டு தூக்கி போடும் ஆரஞ்சு தோல் தாங்க. ஆமாங்க ஆரஞ்சு தோல் முகத்தை வெண்மையாக்குவதில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஆரஞ்சு தோலை முகத்திற்கு போடுவதால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி நீண்ட காலத்திற்கு முகத்தை வெண்மையாக வைத்திருக்கிறது. ஓகே வாருங்கள் அந்த ஆரஞ்சு தோலை எப்படி முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை ஜொலிக்க வைப்பது என்று இப்பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
How to Make Orange Peel Face Pack at Home in Tamil:
ஆரஞ்சு தோல் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- ஆரஞ்சு தோல் முகத்திற்கு தேவையான அளவு
- தண்ணீர்- சிறிதளவு
- தேன்- 1/2 ஸ்பூன்
- கற்றாழை சாறு- 2 ஸ்பூன்
ஆரஞ்சு தோல் பேஸ் பேக் செய்யும் முறை:
ஆரஞ்சு தோலை எடுத்து கொள்ளவும்:
முதலில் ஆரஞ்சு தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.
கற்றாழை மற்றும் தேன் சேர்க்கவும்:
அரைத்த ஆரஞ்சு பேஸ்டை ஒரு கிண்ணத்தில் எடுத்து, அதனுடன் கற்றாழை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஆரஞ்சு பேஸ் பேக் தயார்.!
கற்றாழையுடன் இந்த பொருளை கலந்து போட்டால் போதும் 5 நாட்களிலேயே உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும். |
தேவையானால் பேஸ் பேக்குடன் இதை சேர்த்து கொள்ளலாம்:
இந்த பேஸ் பேக்குடன் உங்களுக்கு விருப்பமானால் அரிசி மாவு, கடலை மாவு, முல்தானிமெட்டி போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து கொள்ளலாம்.
அப்ளை செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் முகத்தை நன்றாக கழுவி விட்டு, ஆரஞ்சு பேஸ் பேக்கை கையால் எடுத்து உங்கள் முகத்தின் எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
இதை 10 நிமிடங்கள் வைத்து, பிறகு 2 நிமிடம் மெதுவாக மஜாஜ் செய்து முகத்தை கழுவுங்கள்.
இதேபோல், வாரத்திற்கு மூன்று முறை செய்தீர்கள் என்றால் உங்கள் முகம் எப்பொழுதுமே வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
உங்களின் உடல் முழுவதும் பளபளப்பாக மாற இந்த ஒரு பொடி மட்டும் போதும்.. |
Orange Peel Toner Making at Home in Tamil:
ஸ்டேப்: 1
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்ததும், அதில் ஆரஞ்சு தோலை சிறிது சிறிதாக நறுக்கி போட்டு கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
இந்த ஆரஞ்சு தோலின் சாறு எல்லாம் தண்ணீரில் இறங்கும் வரை கொதிக்க விடவும். அதாவது தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வரும் வரை கொதிக்க வைய்யுங்கள்.
ஸ்டேப்: 3
பிறகு இதை சிறிது நேரம் ஆறவைத்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொள்ளுங்கள். இப்பொழுது ஆரஞ்சு தோல் டோனர் ரெடி.!
இதை நீங்கள் Face போட்டு 2 மணி நேரம் கழித்து உங்கள் முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். இந்த ஆரஞ்சு தோல் டோனரை நீங்கள் ப்ரிட்ஜில் வைத்துக்கூட பயன்படுத்தலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |