ஒரே இரவில் பாதவெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

Patha Vedippu Home Remedies

இன்றைய பதிவில் ஒரே இரவில் பாதவெடிப்பு குணமாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். ஆண்களை விட பெண்களுக்கே பித்தவெடிப்பு அதிகமாக இருக்கிறது. பெண்கள் எப்பொழுதும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பது தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பாதவெடிப்பை சரி செய்வதற்கு இனி கடைகளில் விற்கும் கிரீம்களை வாங்கி பயன்படுத்த தேவையில்லை. அதுபோல கிரீம்கள் தடவியும் சரியாகவில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதனால் இந்த பதிவை முழுமையாயக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Patha Vedippu Home Remedies in Tamil:

Patha Vedippu

  1. மெழுகுவர்த்தி – தேவையான அளவு
  2. கற்றாழை ஜெல் – 1/2 ஸ்பூன்
  3. விளக்கெண்ணெய் – 1 ஸ்பூன்
  4. தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன்

முதலில் ஒரு கிண்ணத்தில் மெழுகுவர்த்தியை உங்களுக்கு தேவையான அளவு சீவி எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 1/2 ஸ்பூன் அளவில் கற்றாழை ஜெல் சேர்த்து கொள்ளவும்.

அடுத்து அதில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

பின் அந்த கிண்ணத்தை அடுப்பில் வைத்து லேசாக சூடுபடுத்தி கொள்ள வேண்டும். பின் அதை ஆறவிட்டு நன்றாக கலந்து விட வேண்டும். இதுபோல செய்து வந்தால் கிரீம் போல வந்துவிடும்.

பாதங்களில் இருக்கும் வெடிப்பு மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

அப்ளை செய்யும் முறை:

பாதவெடிப்பு மறைய டிப்ஸ்

இப்போது இந்த கிரீம் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் பாதங்களை நன்றாக கழுவி கொள்ள வேண்டும். ஸ்க்ரபரை பயன்படுத்தி பாத வெடிப்பு உள்ள பகுதிகளை நன்றாக தேய்க்க வேண்டும்.

பின் ஒரு சுத்தமான துணியை வைத்து ஈரம் இல்லாமல் பாதங்களை துடைக்க வேண்டும். பின் இந்த கிரீமை பாதவெடிப்பு உள்ள இடங்களில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.

இந்த முறையை இரவு தூங்க போகும் முன் செய்வது நல்லது. பகல் நேரத்தில் நடக்க வேண்டியது இருக்கும். அதனால் இரவில் அப்ளை செய்து கொள்ளவும். இதுபோல தொடர்ந்து 1 வாரம் செய்து வந்தால் உங்கள் பாதங்களில் இருக்கும் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

பாதவெடிப்பு-மறைய

 மெழுகுவர்த்தியில் பாதவெடிப்புகளை சரி செய்யும் பண்புகள் இருக்கிறது. கற்றாழை ஜெல் பாதங்களில் இருக்கும் அழுக்குகளை நீங்கி பாதங்களை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. விளக்கெண்ணெய் பாதவெடிப்புகளை சரி செய்து பாதங்களை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் பாதங்கள் பளபளப்பாக இருக்க உதவுகிறது.  

இந்த முறையை ஒரு முறை செய்து பாருங்கள். நல்ல ரிசல்ட் உங்களுக்கே தெரியும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

பாத வெடிப்பு, குழி நகம் உடனே மறைய இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil