வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நகம் சொத்தை, பாத வெடிப்பை குணப்படுத்த முடியும்..!

Updated On: September 20, 2024 12:27 PM
Follow Us:
patha vedippu neenga tips in tamil
---Advertisement---
Advertisement

பித்த வெடிப்பு நீங்க | Patha Vedippu Neenga Tips in Tamil

பாத வெடிப்பு பிரச்சனை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிக பாதிப்பை கொடுக்கும். ஏனென்றால் பெண்கள் தான் தண்ணீரில் அதிகமாக வேலை செய்கின்றனர். அதுவும் உப்பு தண்ணீரில் வேலை செய்பவர்களுக்கு அதிகமாக பித்த வெடிப்பு ஏற்படும். அதோடு வலியையும் அதிகமாக கொடுக்கும். இந்த பிரச்சனைக்கு கிரீம்களை அப்ளை செய்வதை விட வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்வது எப்படி என்று இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

விரல் சொத்தை நீங்க:

மூன்று பூண்டு பல்லை நச்சு எடுத்து கொள்ளவும். அதோடு மஞ்சள் தூள், பேக்கிங் சோடா 1/2 தேக்கரண்டி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். பின் அதில் வினிகர் சிறிதளவு சேர்த்து கரண்டியால் மிக்ஸ் செய்யவும்.

patha vedipu neenga

இந்த பேக்கை எந்த விரல் சொத்தையாக உள்ளதோ அந்த விரலில் மேல் பகுதியில் வைத்து கவரை வைத்து கட்டி விடவும். இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்து  கழுவி விடவும். இது போல் தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் விரல் சொத்தை நீங்கி விடும்.

பாத வெடிப்பு நீங்க:

குறிப்பு:1

மெழுகுவர்த்தி சிறிதளவு சீவி எடுத்து கொள்ளவும். அதில் ஆலிவ் ஆயில் 2 தேக்கரண்டி சேர்த்து கலந்து விடவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். பின் அதில் மெழுகுவர்த்தி கலந்து வைத்த பாத்திரத்தை அந்த தண்ணீரில் மேலே வைத்து சூடு காட்டவும். இப்படி பண்ணும் போது மெழுகுவர்த்தி உருகி எண்ணெய் பதத்திற்கு கிடைக்கும். கையில் எடுத்து பார்த்தால் பிசுபிசுப்பு தன்மையோடு இருந்தால் எடுத்து ஆற விடவும்.

இதையும் படியுங்கள் ⇒ கை விரல்களில் இருக்கும் கருமை இரண்டே நாளில் நீங்க இதை மட்டும் செய்யுங்கள்

பின் இந்த எண்ணெயை பாத வெடிப்பின் மீது தடவி வாருங்கள். தொடர்ந்து ஏழு நாட்கள் பயன்படுத்தினால் பித்த வெடிப்பு சரியாகிவிடும்.

குறிப்பு -2

பித்த வெடிப்பு நீங்க

ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து அதில் கால் பாதம் நனைகின்ற அளவிற்கு வெந்நீரை ஊற்றி கொள்ளவும். அதில் உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து விடவும். பின் இந்த தண்ணீரில் கால் பாதத்தை 2 நிமிடத்திற்கு அப்படியே வைக்கவும்.

பித்த வெடிப்பு நீங்க

2 நிமிடத்திற்கு பிறகு காலை எடுத்து உப்பு பேப்பர் (Salt paper) பயன்படுத்தி காலில் பித்த வெடிப்பு உள்ள இடத்தை தேய்க்கவும். தேய்த்த பிறகு மாற்றத்தை நீங்களே பார்ப்பீர்கள். இந்த மாதிரி 7 நாட்களுக்கு ட்ரை செய்யுங்கள். கண்டிப்பாக பித்த வெடிப்பு சரியாகிவிடும்.

இதையும் படியுங்கள் ⇒ பித்த வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைய சில டிப்ஸ்

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now