மூன்றே நாட்களில் கரும்புள்ளி நீங்க இதை செய்தால் போதும்..!

Advertisement

முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்க..! Pimples On Face Removal Tips In Tamil..!

Mugathil Karumpulli Maraiya Tips: வணக்கம் தோழிகளே..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளியை எப்படி எளிமையான முறையில் நீக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம். முகத்தில் பருக்கள் வந்து நாளடைவில் அது கரும்புள்ளியாக மாறுவதனால் முக அழகையே மாற்றிவிடுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி நீங்குவதற்கு கடைகளில் விற்கக்கூடிய கெமிக்கல் உபயோகப்படுத்தி தயாரிக்கின்ற கிரீம் வகைகளை முகத்தில் போடுவதால் சருமத்திற்கு அதிக பாதிப்புகளை உருவாக்குகின்றது. இதனால் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்து முக பருக்கள் மற்றும் கரும்புள்ளியை எப்படி நீக்கலாம் என்பதை பற்றி விரிவாக படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

newமுகப்பருவை எளிமையாக நீக்கும் வேப்பிலை சோப்..! Best Neem Soap For Pimples..!

முக கரும்புள்ளியை நீக்க டிப்ஸ் 1:

தேவையான பொருட்கள்:

  1. உருளைக்கிழங்கு 
  2. தக்காளி 
  3. எலுமிச்சை சாறு – சிறிதளவு 

செய்முறை விளக்கம்:

முக சருமத்தில் உள்ள கரும்புள்ளியை போக்க முதலில் உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இதனை மிக்ஸி ஜாரில் பேஸ்ட் போன்று அரைத்து சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளவும். அடுத்து அரைத்து வைத்துள்ளதை ஐஸ் ட்ரேயில் ஊற்றிவைக்கவும்.

ஐஸ் ட்ரேயில் ஊற்றிய பிறகு ஒரு இரவு மட்டும் ஃபிரீஸரில் வைத்தால் நன்றாக கட்டியான தன்மைக்கு வந்துவிடும். இந்த ஐஸ் கட்டியினை இரவு படுக்கைக்கு முன்பு முகத்தினை சுத்தம் செய்து விட்டு மசாஜ் போல் செய்யவேண்டும். இந்த டிப்ஸை பின்பற்றினால் முகத்தில் ஏற்பட்டு உள்ள கரும்புள்ளிகள் பருக்கள் மறைந்துவிடும்.

குறிப்பு: உருளைகிழங்கு மற்றும் தக்காளியில் இயற்கையான பிலீச்சிங் தன்மை இருப்பதனால் நம் முகத்தினில் உள்ள கரும்புள்ளி, இறந்த செல்களை நீக்கி முகத்தினை பொலிவுடன் வைத்திருக்கும். அதோடு முகத்தில் உள்ள கருவளையம் விரைவில் நீங்கிவிடும். 

முக கரும்புள்ளி நீங்க டிப்ஸ் 2 (karumpulligal maraiya tips in tamil):

தேவையான பொருட்கள்:

  1. வெந்தய தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. பட்டை தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. எலுமிச்சை – 1/2 

செய்முறை விளக்கம்:

முகம் கரும்புள்ளி இல்லாமல் புத்துணர்ச்சியாக இருக்க ஒரு சுத்தமான பவுலில் வெந்தய தூள், பட்டை தூள், மஞ்சள் தூள் மூன்றனையும் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எடுத்து இதனுடன் 1/2 எலுமிச்சையை சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல் ரெடி செய்து கொள்ளவும்.

இந்த பேஸ்டை முகத்தினை சுத்தமாக கழுவிய பின்னர் முகத்தில் தடவி 20 – 30 நிமிடம் வரை வைத்து அதன் பின்னர் நீரினால் முகத்தை வாஷ் செய்யலாம்.

குறிப்பு: இந்த டிப்ஸை செய்து வந்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி முகத்தில் உள்ள கரும்புள்ளி மறைந்து முகம் பளிச்சென்று இருக்கும். 

newமுகத்தில் உள்ள கரும்புள்ளி மறைய மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?

முகத்தில் கரும்புள்ளி மறைய என்ன செய்வது டிப்ஸ் 3:

தேவையான பொருட்கள்:

  1. பட்டர் மில்க் – 4 டேபிள் ஸ்பூன் 
  2. கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன் 
  3. தக்காளி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை விளக்கம்:

முகத்தில் உள்ள கரும்புள்ளி நீங்குவதற்கு ஒரு சுத்தமான பவுலில் பட்டர் மில்க், கோதுமை மாவு, தக்காளி பேஸ்ட் மூன்றனையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். அடுத்து நன்றாக பேஸ்ட் போல் ரெடி செய்ததை முகத்தினை சுத்தம் செய்த பின்னர் முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்த பின்னர் சருமத்தில் உள்ள பேஸ்டை வாஷ் செய்து விடலாம்.

குறிப்பு: இந்த டிப்ஸை முகத்தில் கரும்புள்ளி உள்ளவர்கள் பாலோ செய்தால் இறந்த செல்கள் நீங்கி, முகத்தில் பருவினால் வந்த தழும்புகள், கரும்புள்ளி போன்றவை விரைவில் நீங்கிவிடும்.

முகத்தில் கரும்புள்ளி மறைய என்ன வழி டிப்ஸ் 4:

தேவையான பொருட்கள்:

  1. சந்தன பவுடர் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. க்ளிசரின் – 1/2 டீஸ்பூன் 
  3. ரோஸ் வாட்டர் – 1 டேபிள் ஸ்பூன் 

செய்முறை விளக்கம்:

சருமத்தில் கரும்புள்ளி மறைய பவுலில் சந்தன பவுடர், க்ளிசரின், ரோஸ் வாட்டர் மூன்றையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி 20 – 30 நிமிடம் வரை வைத்து அதன் பிறகு முகத்தினை நீரினால் வாஷ் செய்து கொள்ளலாம். இந்த டிப்ஸ்கள் அனைத்தையும் பாலோ செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முதல் வாரத்திலே நீங்கிவிடும். இந்த டிப்ஸ்கள் கரும்புள்ளிகள் நீக்குவதோடு இல்லாமல் சருமத்தினை பொலிவுடன் மாற்றும்.

குறிப்பு:

சந்தன பவுடர்: சருமத்தினை சுத்தமாக வைப்பதோடு, முகத்தினை நல்ல ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வைத்திருக்கும். 

க்ளிசரின்: முகத்தை சுத்தம் செய்வதோடு மட்டும் இல்லாமல் முகத்தினை எப்போதும் பளிச்சென்று வைத்திருக்க உதவுகிறது.

ரோஸ் வாட்டர்: ரோஸ் வாட்டரானது முகத்தினை எப்போதும் ஈரப்பதமுடன் வைத்திருக்கும். முகம் கருமையை நீக்கி வெள்ளையாக மாற்றும்.

newமுகம் பளிச்சென்று இருக்க இயற்கை அழகு குறிப்புகள்..! face brightness tips in tamil..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> இயற்கை அழகு குறிப்புகள் 
Advertisement